Facebook Pixel அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..! | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

Dinamani Tiruppur

|

January 14, 2026

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

- பழ.கருப்பையா

ஓரிரு வாரங்கள் படம் வெளியாவது தள்ளிப் போகுமே ஒழிய அதனால் கேடு ஒன்றுமில்லை! அந்தப் படம் சக்கையாக இருந்தாலொழிய, தணிக்கைக் குழு அந்தப் படத்தை ஓடவிடாமல் தடுத்து விட முடியாது!

தணிக்கைக் குழு என ஒன்று எந்தக் காலத்திலும் இருப்பதால், அதை மனத்தில் கொண்டுதான் படம் எடுக்க முடியும்!

அந்தப் படம் அடுத்த நிலை ஆய்வுக் காக ஏன் நிறுத்திவைக்கப்பட்டது என்று புரியாமலேயே, இசுடாலின் நடிகர் விசய்க்கு நேரக் கூடாதது நேர்ந்துவிட்டது போலவும், மைய அரசு மாற்றாரை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை எனப் பல ஆயுதங்களை வைத்திருப்பதில், இப்போது தணிக்கைக் குழுவும் சேர்ந்திருக்கிறது என்று விசயின் மீது பரிவு மொழிகளைச் சொரிந்திருக்கிறார்! ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன!

இதுபோன்ற சலிப்புகளும், எரிச்சல்களும் முதலமைச்சர் தொடங்கி எளிய மனிதன் வரை எல்லாருக்கும் ஏற்படுபவைதான்!

மாநில அரசின் கீழ் தலைமைப் பதவியைப் பெறும் டிஜிபியால் குற்றம் தெளிவாகக் கண்டறியப்பட்ட நிலையில்கூட வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றால், 'வழுவில்லாச் செயல்பாட்டுக்கு உரியதாக நம்முடைய அரசியல் சாசன உருவாக்கம் இல்லை என்பதுதான் பொருள்!

அறிவு குறைந்த திருடர்கள் சங்கிலி அறுக்கவும், வீடேறிக் குதிக்கவும் போகிறார்கள்! சாமர்த்தியத்தில், சூழ்ச்சியில் கூடிய திருடர்கள் அரசியல்வாதியாகி அமைச்சர்களாகி விடுகிறார்கள்!

அந்தத் திருடர்கள் சட்டத்தின் பிடியில் மாட்டுகிறார்கள்! இந்தத் திருடர்கள் கையில்தான் சட்டமே இருக்கிறது!

மக்களுக்குத் தெளிவை உண்டாக்குவது அரசியல் கட்சிகளின் கடமை! மக்கள் சராசரி வாழ்க்கையில், பாடுகளோடு வாழ்ந்து களைத்துப் போகிறவர்கள்! குடியாட்சியின் சிறப்பே எதிர் அரசியலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம்தான்!

ஆனால் நண்டு, சிண்டு உட்படப் பத்துப் பன்னிரண்டு கட்சிகள் ஆளும் கட்சிக்குக் கூட்டணி என்னும் நிலையில், 'ஆயுள் கைதிகளாக' மாறிவிடுகிறார்களே!

சவாரி முடிந்தால் குதிரை, இலாயத்திற்குப் போக வேண்டும்! தேர்தல் முடிந்தால் கூட்டணிக் கட்சிகள் தன் கட்சி அரசியலுக்குத் திரும்ப வேண்டும்!

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruppur

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் விஜய்யை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை சந்தித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பயோபிக் லைன் அப்!

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruppur

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruppur

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruppur

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size