試す 金 - 無料
நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!
Dinamani Tiruppur
|August 25, 2025
பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
நான் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டி, விளம்பரச் சிற்றேடு தயாரிப்பு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்கு நடுவராக என்னை அழைத்திருந்தார்கள். நிறைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுதியிருந்தார்கள். ஏறக்குறைய அனைவருமே சிறப்பாக எழுதியிருந்தார்கள். அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனைகளையும், கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை விதமான போதைப் பொருள்கள் கிடைக்கின்றன என்று அவர்கள் எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. போதைப் பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று எல்லோருமே வலியுறுத்தியிருந்தார்கள்.
மாணவர்களுக்கு சுயக் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் அவசியம்; எனவே, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடித்திருந்தது சிறப்பு. விளம்பரச் சிற்றேடு தயாரிக்கும் போட்டியிலும், ஓவியப் போட்டியிலும் கலக்கியிருந்தார்கள். வார்த்தைகளால் சொல்வதைவிட வண்ணங்கள் அதிகம் பேசின. தலைப்பு - போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்' போதைப் பொருள் உபயோகத்தால் நம் நாடு கலங்கிப் போய், கருத்துப் போயிருப்பதாக ஒரு படம்; எதிர்காலம் இருண்டு போகும் என்ற எச்சரிக்கை படம் - என அருமையாக வரைந்திருந்தார்கள். அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்த உணர்வு; நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தெளிவு; போதைப் பொருள் கூடாது என்ற மன உறுதி அவர்களில் வெளிப்பட்டன.
இந்தப் பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் அதைத் தொட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தோன்றியது. பதின்பருவ பிள்ளைகளின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டோம் என்றால், அவர்களைக் காப்பாற்றி விட்டோம் என்று மன நிறைவு கொள்ளலாம். இந்தக் காலப் பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் கடலில் ஒரு துளி அன்று, ஒரு துளியில் அடங்கியுள்ள கடல்.
எதற்குப் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்வதில் சிரமமாகிவிட்டது. சரியான மேய்ப்பர் இருந்து விட்டால் மந்தை ஆடுகள் வழிதவறிப் போகாது என்பதுபோல், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளம் தலைமுறை திசைமாறிப் போகாது. ஆகவே, இந்த மாதிரி போட்டிகளை நடத்தினால் அவர்களை யோசிக்க வைக்க முடியும்.
このストーリーは、Dinamani Tiruppur の August 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruppur からのその他のストーリー
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size