試す 金 - 無料
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
Dinamani Tirunelveli
|August 31, 2025
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
-
ஜம்மு, ஆக. 30:
கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 140 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பேர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீர் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.
தலைவர்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவர்கள் இந்தச் சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
このストーリーは、Dinamani Tirunelveli の August 31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tirunelveli からのその他のストーリー
Dinamani Tirunelveli
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Tirunelveli
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

