試す - 無料

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

Dinamani Tiruchy

|

December 02, 2025

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

- க. பழனித்துரை

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

பொதுவாக ஒரு பொருள் யாருடையதோ, அவர்களால் மட்டுமே அந்தப் பொருளை பாதுகாக்க முடியும். அதைப் பாதுகாப்பது எப்படி என்பதை உரியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள்.

வாக்கைப் பாதுகாக்க வாக்காளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதையும் வாக்காளர்கள்தான் செய்ய வேண்டும். அதைப் பாதுகாக்க அவர்களுக்குத் தேவையான வாக்கு குறித்த விழிப்பை, அறிவை மக்களுக்கு நல்வழி காட்டும் தலைவர்கள்தான் தரவேண்டும். அந்த விழிப்புணர்வை இதுவரை வாக்காளர்களுக்கு அளித்தோமா என்பதுதான் கேள்வி. இந்த நாட்டில் வாக்கை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு நாம் அனைவரும் தரம் தாழ்த்தியுள்ளோம். வாக்களிக்க கூலி கொடுத்தோம். பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தோம், அதே போல், இன்று அதையே சந்தைப்படுத்தி விற்று வாங்கும் பொருளாக ஆக்கி வைத்துவிட்டோம். வாக்கைச் சீரழித்தது மக்களல்ல, மாறாக அரசியல் கட்சிகள்தான்.

உலகிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட நாடு, அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடி, அதிக எண்ணிக்கையில் அலுவலர்களை வைத்து தேர்தல் நடத்தும் ஒரே நாடு இந்தியா. அது மட்டுமல்ல, இவ்வளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடும் இந்தியாதான். மக்களாட்சிக்கு எதிரான பல சமூகக் கூறுகள் உள்ள நாட்டில் தேர்தலை நடத்துவதே ஒரு சாதனை என்றுதான் ஆய்வாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுப்பதும் கட்சிகள்தானே தவிர வாக்காளர்கள் அல்ல. தேர்தல் ஆணையராக இருந்தவர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகள் அளித்து அந்தப் பதவிக்கு வருகிறவர்களை தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தூண்டியதும் ஆட்சியில் இருந்த கட்சிகள்தானே? தேர்தல் ஆணையத்துக்கு ஆணையராக வர விரும்புவோர் 'தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு எந்தப் பதவியும் எங்கும் பெறமாட்டேன்' என்ற உறுதிமொழிப் பத்திரம் தந்தவர்களைத்தான் போட வேண்டும் என்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமே. இந்த குறைந்தபட்ச சீர்திருத்தத்தைக்கூட ஏன் நம் கட்சிகள் பேச மறுக்கின்றன?

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Tiruchy

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size