Facebook Pixel அறம் பெருகட்டும்! | Dinamani Tiruchy - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

அறம் பெருகட்டும்!

Dinamani Tiruchy

|

August 04, 2025

மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஒளவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி 'அறம் செய விரும்பு' என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.

- முனைவர் அருணன் கபிலன்

பழந்தமிழரின் வாழ்க்கை ‘இன்பமும் பொருளும் அறனும்’ என்றாங்கு அன் பொடு புணர்ந்த ஐந்திணை வாழ்க்கையாகப் பகுக்கப்பட்டிருந்தது. இந்த மரபை மாற்றி அறம், பொருள், இன்பம் என்று முதன்மைப்படுத்தின அற இலக்கியங்கள். முதல், கரு, உரிப் பொருள்களிலிருந்து மேம்பட்டு வாழ்வுக்குரிய உறுதிப் பொருள்களை உணர்விக்கும் பெரும்பணியைச் செய்தன அவை.

காதலும் வீரமும் கண்ணெனப் போன்றிய சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, காதலையும் வீரத்தையும் அறமே ஒருசேரப் போதிக்கிறது; ஆதலால், அறத்தைக் கொள்மின் என வழிகாட்டின அற இலக்கியங்கள்.

அறம், வாழ்க்கைக்குத் தேவையான முதற்பொருள் மட்டுமன்று; இலக்கியத்துக்கும் அதுவே அடிப்படை. அறத்தை நூற்பயன்களில் முதன்மை என்கிறது நன்னூல். அன்புசார்ந்த அறத்தைத் தமிழர்கள் அகம் என்றனர். இன்பம் முதலாகிய மற்றெல்லாவற்றையும் புறம் என்றே அவர்கள் கருதினர். இன்பமும் பொருளும்கூட அறத்தோடு இயைகிற வேளையில் அதுவும் அகமாகிப் போவது அற்புதமல்லவா?

அரசியலாளர்களுக்கே அறம் முதன்மையானதாக விளங்குகிறது. சட்டங்களை இயற்றுதலோடு முடிந்து விடுவதில்லை அரசின் கடமை; இயற்றிய சட்டத்துக்கு மக்களிடமிருந்து நன்மதிப்பை ஈட்டுதலும், அந்தச் சட்டத்தை இடையறாது தொடர்ந்து தானே முன்னின்று காத்தலும், காத்த அந்தச் சட்டத்தின் தொகுதியை மேலும் மேலும் விரிவுபடுத்தி வகுத்தலும் ஓர் வல்லரசுக்குரிய பெருமையைப் பெற்றுத் தரும். அதாவது, சட்டம் உயர்ந்து யாவருக்கும் பொதுவான அறமாகிறபோதுதான் அது சிறப்புடையதாகிறது. பண்டைக்கால மன்னர்களின் ஆட்சிக்கு அறமே முதன்மையாக விளங்கியிருக்கிறது.

மன்னனுக்கு வெற்றி தருவது வேலன்று, அவன் முறையோடு நடத்துகின்ற கோல் தான் என்கிறார் திருவள்ளுவர்.

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்

மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size