試す 金 - 無料
மேக்கேதாட்டு அணை கூடாது
Dinamani Thoothukudi
|June 20, 2026
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
-
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தனித் தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது:
காவிரி நடுவர் மன்றம் 5.2.2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16.2.2018-இல் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறைப்படுகை எனக் குறிப்பிட்டுள்ளது. படுகையின் மொத்த நீரையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
このストーリーは、Dinamani Thoothukudi の June 20, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது
காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்
தன் மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சிவசேனை (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம்: அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Listen
Translate
Change font size

