Facebook Pixel ஒரு மனிதன்... ஓர் இயக்கம்... | Dinamani Thoothukudi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...

Dinamani Thoothukudi

|

July 23, 2025

எனது மதம் பாரதீயம்' என்றும், என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், 'தீண்டாமை வெறுக்கத்தக்க பாவமாகவும், இந்திய சமூகத்துக்கே களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் சிவா.

- த. ஸ்டாலின் குணசேகரன்

பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகிய மூவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க கால மும்மூர்த்திகள் என வரலாற்றாளர்களால் வரையறுக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழ் மண்ணில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோர் திலகர் சகாப்தத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்கினர்.

இன்று வீரமுரசு சுப்பிரமணிய சிவா மறைந்த நூற்றாண்டு நிறைவு நாள். அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், வத்தலகுண்டில் 1884-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி பிறந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தான் அமைத்திருந்த பாரதாஸ்ரமத்தில் 1925-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி மறைந்தார் சிவா. அப்போது, அவருக்கு வயது 41.

1900-ஆம் ஆண்டு கோவையில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பதினாறு வயது. திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை.

1902-இல் இருந்து சில காலம் திருவனந்தபுரத்தில் இருந்தார். இவர் ஒரு சராசரி இளைஞராக விளங்கவில்லை. எந்நேரமும் இவரைச் சுற்றி பத்து இளைஞர்கள் இருந்து கொண்டே இருப்பர்.

1906-இல் சிவா ஆர்ய சமாஜ தொண்டர் தாகூர்கான் சந்திரவர்மா என்பவரின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். அவரிடம் இயல்பாகவே அமைந்த அரசியல் உணர்வை தாகூர்கான் உரை தூண்டிவிட்டது.

வங்கப் பிரிவினை, ஆங்கிலேயர் சூழ்ச்சி, சுதேசி இயக்க வளர்ச்சி, காங்கிரஸின் சுயராஜ்ய தீர்மானம், நாவலர் விபின் சந்திர பாலரின் கனல் தெறிக்கும் உரைகள், லாலா லஜபதி ராய்-அஜீத் சிங் நாடு கடத்தல் ஆகிய அரசியல் நிகழ்வுகள் சிவாவின் சிந்தனையில் பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்த தீவிரச் செயல்பாட்டில் நாட்டமும், ஈடுபாடும்மிக்க வித்தியாசமான இளைஞராக வளர்ந்தார் சிவா.

'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற இளைஞர் அமைப்பை திருவனந்தபுரத்தில் நிறுவினார். இளைஞர்கள் பலரை இவ்வமைப்பில் இணைத்து அவர்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார்.

Dinamani Thoothukudi からのその他のストーリー

Dinamani Thoothukudi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size