Facebook Pixel கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால் | Dinamani Salem - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

Dinamani Salem

|

June 28, 2026

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

- வி.என். ராகவன்

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

ஓராண்டாகப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இந்தக் கல்யாண மஹால் குறித்து திருவையாறைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளரும், வழக்குரைஞருமான நா. பிரேமசாயி கூறியது:

"திருவையாறின் அடையாளமாக காவிரிக் கரையோரம் நிற்கும் மூன்றடுக்குக் கட்டடம் கல்யாண மஹால். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி 1821 - ஆம் ஆண்டில் தஞ்சாவூரிலிருந்து வாரணாசிக்கு யாத்திரை புறப்பட்டார். இரண்டாண்டு நீண்ட யாத்திரையில் அவர் கயா, கொல்கத்தா, புரி போன்ற பழைமையான ஊர்களுக்கும் சென்றார். அவர் தனது யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் திருவையாறில் தங்கினார்.

அப்போதே அவருக்குக் கங்கைக் கரையில் உள்ளது போன்று திருவையாறு காவிரிக் கரையிலும் எழில்மிகு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. திருவையாறு புஷ்ய மண்டபத்துக்கும், திரு மஞ்சன படித்துறைக்கும் இடையில் இருந்த அரசுக்குச் சொந்தமான பெரிய தோட்டத்தில் இக்கட்டடத்துக்கான வேலைகளை மன்னர் உடனே தொடங்கிவிட்டார்.

அக்காலத்தில் கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீரோட்டத்தைத் தாங்கும் அளவுக்குக் கட்டடத்தின் அடித்தளம் கருங்கல், ஈயம், கடுக்காய்த் தூள், வெள்ளப்பாகு கொண்ட கலவையால் அமைக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு மாளிகை மரம், இரும்பு இல்லாமல் செங்கல், நன்கு அரைத்த சுண்ணாம்பு கொண்ட கலவையால் கட்டப்பட்டது.

இந்த மாளிகையை பெரிய செங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதன் சுவர்கள் முகம் பார்க்கும் அளவுக்கு வழுவழுப்பாக இருந்தன.

Dinamani Salem からのその他のストーリー

Dinamani Salem

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை

ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size