試す 金 - 無料
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
Dinamani Salem
|November 23, 2025
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் குறித்த நினைவலைகளை ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தலைவர் ஏவி.எம். குமரன் பகிர்ந்து கொள்கிறார்.
“ஏவி.எம் நிறுவனரும், தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவருமான எங்கள் தந்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு வருவதற்கு முன்பாக காரைக்குடியில் ‘சரஸ்வதி டாக்கீஸ்’ என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். ஏவி.எம் ஸ்டூடியோஸ், ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றை அவர் தொடங்கியவுடன், சென்னையில் திரையரங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், 1970-களின் பிற்பகுதியில் ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கப் பணிகளைத் தொடங்கினார்.
ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த வடபழனி அச்சகத்தின் வியாபாரம் குறைந்து போகவே, அதனை சிறியதாக்கி வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அச்சகத்தின் பைண்டிங் பிரிவு இருந்த இடத்தில் திரையரங்கம் கட்டுவதற்கு முடிவு செய்தார். அவர் திரையரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்த இடம் அப்போது சென்னை மாநகர எல்லைக்குள் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்டிருந்தது.
திரையரங்கின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அசாத்தியமானது. தினமும் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிடுவார். அங்கேயே தனக்குரிய மேஜையில் அமர்ந்து கொண்டு அனுபவ அறிவின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார். கட்டுமானப் பகுதியில் நிலவிய தூசால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. திரையரங்கைக் கட்டி முடிப்பதற்கு முன்னரே நிமோனியா நோய் காரணமாக அவர் மறைந்துவிட்டார்.
このストーリーは、Dinamani Salem の November 23, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Salem からのその他のストーリー
Dinamani Salem
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Salem
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Salem
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Salem
இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு
டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
1 min
December 02, 2025
Dinamani Salem
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Salem
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Salem
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Salem
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Salem
எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Salem
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Listen
Translate
Change font size
