Facebook Pixel சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்... | Dinamani Salem - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...

Dinamani Salem

|

July 14, 2025

அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.

- பேராசிரியர்

அறிவார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. இவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்; இவர்கள் ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று பணியாற்றிய சமூக உணர்வாளர்கள்.

ஏன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் காட்டும் காரணமும், ஆதாரமும் யாராலும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க நடத்தப்படும் போட்டியில் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள நம் அரசியல் கட்சிகள் செய்யும் செயல்கள் சமூக ஒற்றுமையைத் தகர்த்துக் கொண்டே வருகின்றன. அதுமட்டுமல்ல சமூகப் பிணக்குகளும், வன்முறையும் அதிகரித்து வருகின்றன.

சமூகப் பிணக்கும், சமூகப் பிரிவினைகளும், எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள். இவை அனைத்தும் ஒரு நாட்டில் செயல்பட்டால் மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்க இயலாது.

இந்தியாவில் 146 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்புக்குப் பொது விநியோகத் திட்டத்தில் கிடைக்கும் விலையில்லா உணவுப் பொருள்களை நம்பி இருப்பதும், 42 கோடி மக்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழ்வதும் இதன் விளைவுகள் தான்; இதைத்தான் உலக வங்கி நம்மைச் சரி செய்யக்கூறி அறிவுறுத்துகிறது. இந்தச் சூழல் மக்களாட்சிக்கும் நல்லதல்ல; சமூக ஒற்றுமை, அமைதி, மேம்பாடு இவற்றுக்கும் உகந்தது அல்ல.

இந்தச் சூழலை இனிமேலும் நாம் அனுமதித்தால் மக்களை நம் அரசியல் ஆளுகைச் செயல்பாட்டால் வன்முறைக்குள் தள்ளுகிறோம் என்பதுதான் பொருள். இந்த நிலையில்தான், நம் அரசியல் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அரசியலை முன்னெடுத்து, இந்திய மேம்பாட்டு வரலாற்றில் எந்தெந்த ஜாதிகள் மேம்பட்டிருக்கின்றன, எந்தெந்த ஜாதிகள் மேம்பட முடியவில்லை என்பதைக் கண்டறிய முயல்கின்றன.

Dinamani Salem からのその他のストーリー

Dinamani Salem

Dinamani Salem

ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’

அமெரிக்கா தொடக்கம்; 2 கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்

time to read

1 mins

May 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Salem

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

தேசிய பங்குச் சந்தையில் தங்கத்தை 'இஜிஆர்' முறையில் வாங்கலாம்

இணையவழி தங்க வர்த்தகத்தை இன்னும் எளிமையாகவும் முறைப்படியாகவும் மாற்றுவதற்காக, 'மின்னணு தங்க ரசீது (இஜிஆர்)' எனும் புதிய முதலீட்டு முறையை தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Salem

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size