試す 金 - 無料
பொறுப்பால் உயரும் பெருமை!
Dinamani Pudukkottai
|April 27, 2026
தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.
ஒரு சிறந்த தலைமைக்கு, மண்ணையும் பொன்னாக்கும் வல்லமை உண்டு. ஒரு தலைவனின் தொலைநோக்குப் பார்வை, நம்பிக்கை மற்றும் உழைப்பால் நிகழும் ரசாயன மாற்றம் அது என்றும் சொல்லலாம். பதவி என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரபூர்வமான தளம். ஒருவர் தன் பதவியை சரியாகப் பயன்படுத்தினால், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பை சீரமைத்து அதன் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த முடியும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியை, அதன் தலைமை ஆசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் தன் முயற்சியால் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று சிறந்த உள்கட்டமைப்புகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியுள்ளார். 2021-ஆம் ஆண்டு அந்தப் பள்ளிக்கு அவர் பணியிடமாறுதலில் வந்தபோது ஒரு சவாலான சூழலையே எதிர்கொண்டார். அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் பின் தங்கிய நிலையில் அந்தப் பள்ளி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் அந்தப் பள்ளியை மிகச் சிறந்த பள்ளியாக தரம் உயர்த்திக் காட்டிவிட்டார்.
தற்போது அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எப்படி அவரால் இது சாத்தியமாயிற்று? அது என்ன சிஎஸ்ஆர்?. இந்திய சட்டப்படி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் லாபமீட்டும் பெரிய தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் குறைந்தபட்சம் இரண்டு சதவீதத்தை சமூக நலத் திட்டங்களுக்காக செலவிட வேண்டும். நிறுவனங்கள் இந்த நிதியை நேரடியாகவோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு பள்ளி, கல்லூரி, நிறுவனம் மற்றும் அரசுத் துறை என எதுவாக இருந்தாலும் அங்கு தலைமைப் பதவியில் இருப்பவர் உள்ளார்ந்த அக்கறையோடும், ஆர்வத்துடனும் செயல்பட்டால் மட்டுமே அந்த நிறுவனம் அல்லது துறை வளர்ச்சியடையும். ஒருவர் பணியிடமாற்றம் பெற்று ஒரு நிறுவனத்துக்கு வந்தால், அவர் பொறுப்பேற்ற அந்த விநாடியிலிருந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்.
அதே போல தலைமை பொறுப்பில் இருப்பவர் அங்குள்ள அனைத்துக் குறைகளையும் நிவர்த்தி செய்ய முயல வேண்டும். அப்படி தன் வேலையை நேசிப்பவர்கள், கடுமையாக உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைவு.
このストーリーは、Dinamani Pudukkottai の April 27, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Pudukkottai からのその他のストーリー
Dinamani Pudukkottai
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Pudukkottai
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.
2 mins
May 02, 2026
Dinamani Pudukkottai
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Pudukkottai
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Pudukkottai
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Pudukkottai
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Pudukkottai
சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.
1 min
May 01, 2026
Dinamani Pudukkottai
ஐஓபி லாபம் 43% வளர்ச்சி
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
May 01, 2026
Dinamani Pudukkottai
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
May 01, 2026
Dinamani Pudukkottai
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size
