Facebook Pixel மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

Dinamani Perambalur & Ariyalur

|

March 02, 2025

மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்று கூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரியிடம் பாசம்.

- ரவிசுப்பிரமணியன்

யதுகிரியம்மாளின் பாரதி நினைவுகள் புத்தகத்தின் முதல் அத்தியாயமே 'ஏலேலோ பாட்டு' என்ற தலைப்பில் வெகு சுவாரஸ்யமாக இப்படித் தொடங்குகிறது.

"ஒரு நாள் சாயங்காலம் பாரதியாரின் பெண்கள் இருவர், நாங்கள் நான்கு பேர், ஆக ஆறு சிறுவர்களும், பாரதியாரின் மனைவி செல்லம்மாவுடன், பாரதியாரும் கடற்கரை வந்து சேர்ந்தோம். மணி ஆறரை இருக்கும். மணல் மேல் உட்கார்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அருகில் செம்படவர் சிலர் கூடைகளில் மீன்களை நிரப்பி விட்டுச் சந்தோஷமாய்ப் பாடி, பஜனை செய்து கொண்டு சென்றார்கள்.

பாரதியாருக்குப் பெரிய சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் சாதாரண பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் - இவர்களுடைய பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர் அந்தச் செம்படவர் பாட்டுக்குச் 'சபாஷ்' சொல்ல ஆரம்பித்தார்.

நான் அவரைப் பார்த்து, "இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே? எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லையே!" என்றேன்.

அதைக் கேட்டு செல்லம்மா, "அவர் ஒரு பித்து என்பது உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கையடிப்பவன் வந்தால், இவர் கூத்தாடுகிறார்; தம் நினைவே கிடையாது. இப்போ சாயங்கால வேளை; கடற்கரை; அலைகளின் ஓலி; இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு! கேட்க வேண்டுமா?" என்று சொல்லிச் சிரித்தாள்.

உடனே பாரதியார் எழுந்தார். ஒரு பென்சிலும் காகிதமும் எடுத்துக் கொண்டு அந்தச் செம்படவரிடம் ஓடினார்; அதில் இருந்த ஒரு கிழவனை அந்தப் பாட்டை அடியடியாகச் சொல்லும்படி கேட்டார்; பிழைகளைத் திருத்திக் கொண்டு எங்களிடம் வந்து, "நீங்களெல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே! பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்" என்றார்.

செல்லம்மா: ஆகா! நீங்கள் எல்லாருக்கும் சிஷ்யர்தான்! முதல் தெய்வமாகிற மடத்தின் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!

பாரதியார்: இதோ பார், செல்லம்மா. உன் அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே! அந்தச் சாரமில்லாத, உண்மையல்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவனுக்குரிய தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே!

Dinamani Perambalur & Ariyalur からのその他のストーリー

Dinamani Perambalur & Ariyalur

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Perambalur & Ariyalur

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Perambalur & Ariyalur

பெண் காவலர் புகார்: காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப்-இல் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Perambalur & Ariyalur

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Perambalur & Ariyalur

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Perambalur & Ariyalur

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியீடு

வைகாசி விசாகத் திருநாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.

time to read

1 min

May 31, 2026

Translate

Share

-
+

Change font size