Facebook Pixel பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு! | Dinamani New Delhi - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!

Dinamani New Delhi

|

October 12, 2025

காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:

- -தமிழானவன்

பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.

பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?

பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?

இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.

Dinamani New Delhi からのその他のストーリー

Dinamani New Delhi

திமுகவில் இணைந்தார் காங்கிரஸ் இளைஞரணி செயலர்

காங்கிரஸ் தேசிய இளைஞரணிச் செயலர் ஸ்ரீநிதி மோகன், திமுகவில் இணைந்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani New Delhi

தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு

தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்ததை பார்க்கும்போது, தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

June 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு

மத்திய அமைச்சர் தகவல்

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani New Delhi

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன், தவெகவில் வியாழக்கிழமை இணைந்தார்.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size