試す 金 - 無料
இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்
Dinamani Nagapattinam
|October 17, 2025
அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.
கொஞ்சம் தட்டிப் போட்ட சுக்கும், சிட்டிகை மஞ்சளும், மிளகும், பனங்கற்கண்டும் சேர்ந்த சுக்கு காபியை சுவைக்காதவர் யாருக்கும் இருக்க முடியாது. அது தொண்டை கரகரப்புக்கும், இருமலுக்கும் நல்ல பலன் தரும். அண்மைக்காலமாக நவீனத்துக்கு மாறியதால் பலர் நமது பாரம்பரியத்தை மறந்துவிட்டனர்.
உண்மையில் சித்த மருத்துவம் கூறும் பல அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் இருமலுக்கு நல்ல பயனளிக்கக்கூடியதாக உள்ளன. சுக்கு, மஞ்சள், மிளகு, திப்பிலி ஆகியன அந்த வரிசையில் அடங்கும். தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை, கண்டங்கத்திரி ஆகிய எளிய மூலிகைகளும் இருமலுக்கு பயன்தரக் கூடியன.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரம் வறட்டு இருமலுக்கு நல்ல பலன் தரும். சித்த மருந்தான அதிமதுர சூரணத்தில் உள்ள ‘கிளிசிரிசின்’ எனும் வேதிப் பொருள் தொண்டையை மென்மையாக்கி இருமலைக் குறைக்கும்; புண் ஆற்றி செய்கையும் இதற்குண்டு.
சளியுடன் கூடிய இருமலுக்கு 'ஆடாதோடை மணப்பாகு' எனும் சித்த மருந்து ஆகச்சிறப்பான மருந்து. இது நுரையீரலில் கெட்டிப்பட்ட சளியை இளக்கி வெளிப்படுத்தும். மூச்சுக்குழாயை விரிவடையச் செய்யும். அதோடு குரல்வளையில் உள்ள தசைகளைத் தளர்த்தும் என்கிறது நவீன ஆய்வுகள்.
ஆடாதோடையில் உள்ள 'வாசின் மற்றும் ப்ரோம்ஹெக்ஸின்' வேதிப்பொருள்கள் மருத்துவ குணத்துக்கு காரணமாகின்றன. ப்ரோம்ஹெக்ஸின் மூலக்கூறு நவீன மருத்துவத்தின் இருமல் மருந்துகளிலும் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சித்த மருந்தான ‘ஆடாதோடை குடிநீரும்' இருமலைப் போக்குவதில் சிறந்தது.
このストーリーは、Dinamani Nagapattinam の October 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Nagapattinam
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Nagapattinam
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Nagapattinam
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Nagapattinam
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

