試す - 無料

வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!

Dinamani Nagapattinam

|

July 26, 2025

ன்று எங்கும் புதிய தலைமைத்துவத்திற்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுயநல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பார்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.

- க. பழனித்துரை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஓர் அறிவியலாளராக தொழில்நுட்பவாதியாக அரசில் செயல்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்த இந்திய மக்களின் மாபெரும் தலைவர். அவர் புகழப்படுவது, போற்றப்படுவது அவர் வகித்த பதவியால் அல்ல; அவர் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் கனவாலும் தான்; 'இந்தியா 2020' என்பது அவர் தயாரித்த ஒரு கனவுத் திட்டம்.

இந்தியா என்ற நாடு இருக்கிறது; அங்கு மக்கள், அரசு நிர்வாகக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், தொழில்சாலைகள், கல்விச் சாலைகள், விவசாயிகள், ஊடகங்கள், குடிமைச் சமூகங்கள் என அனைத்தும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இருந்தபோதும், நம் நாட்டின் விடுதலைக்கு மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் கண்ட கனவு சுதந்திரத்துக்குப் பிறகு நனவானதா என்ற கேள்வியில் இவர் தொடங்கி, இல்லை என்ற நிலையில், அதை இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்து உருவாக்கியதுதான் இந்தக் கனவு 'இந்தியா 2020'.

அன்றைய சூழலில் அரசும், நிர்வாகமும், அரசியலும் உளுத்துப் போய்க் கொண்டிருப்பதை நல்லவர்கள் பார்த்து ஆதங்கப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் வாளா இருப்பதைக் கண்ட இவர், புதிய கனவில் இவர்களை இணைக்க முயன்றார். காரணம், இவரின் கனவு ஒரு துறைக்கானதோ அல்லது பகுதிக்கானதோ அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கானது; நாட்டு மக்களுக்கானது.

இந்தக் கனவை நிறைவேற்ற அரசுக் கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஒட்டு மொத்த இந்தியாவும் கிளர்ந்தெழ வேண்டும்; சுதந்திரப் போராட்டத்துக்கு மக்கள் தியாகம் செய்யப் புறப்பட்டதுபோல், இந்தச் செயல்பாடுகளுக்கு தேவை தியாகம் அல்ல; நாட்டுப்பற்றுடன் தாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் அறப்பணியாக செய்தாலே போதுமானது. அனைத்தும் நாட்டுக்கான பணியாக மாறிவிடும்.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Nagapattinam

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size