Facebook Pixel மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...! | Dinamani Nagapattinam - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

Dinamani Nagapattinam

|

March 02, 2025

பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.

- ரவிசுப்பிரமணியன்

யதுகிரியம்மாளின் பாரதி நினைவுகள் புத்தகத்தினுடைய முதல் அத்தியாயமே 'ஏலேலோ பாட்டு' என்ற தலைப்பில் வெகு சுவாரஸ்யமாக இப்படித் தொடங்குகிறது.

“ஒரு நாள் சாயங்காலம் பாரதியாரின் பெண்கள் இருவர், நாங்கள் நான்கு பேர், ஆக ஆறு சிறுவர்களும், பாரதியாரின் மனைவி செல்லம்மாவுடன், பாரதியாரும் கடற்கரை வந்து சேர்ந்தோம். மணி ஆறரை இருக்கும். மணல் மேல் உட்கார்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அருகில் செம்படவர் சிலர் கூடைகளில் மீன்களைத் திரப்பி விட்டுச் சந்தோஷமாய்ப் பாடி பஜனை செய்து கொண்டு சென்றார்கள்.

பாரதியாருக்குப் பெரிய சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் சாதாரண பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் - இவர்களுடைய பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர் அந்தச் செம்படவர் பாட்டுக்குச் சபாஷ் சொல்ல ஆரம்பித்தார்.

நான் அவரைப் பார்த்து, “இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே? எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லையே!” என்றேன்.

அதைக் கேட்டு செல்லம்மா, “அவர் ஒரு பித்து என்பது உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கையடிப்பவன் வந்தால், இவர் கூத்தாடுகிறார்; தம் நினைவே கிடைப்பாது. இப்போ சாயங்கால வேளை; கடற்கரை; அலைகளின் ஒலி; இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு! கேட்க வேண்டுமா?” என்று சொல்லிச் சிரித்தாள்.

உடனே பாரதியார் எழுந்தார். ஒரு பென்சிலும் காகிதமும் எடுத்துக் கொண்டு அந்தச் செம்படவரிடம் ஓடினார்; அதில் இருந்த ஒரு கிழவனை அந்தப் பாட்டை அடி அடியாகச் சொல்லும்படி கேட்டார்; பிழைகளைத் திருத்திக் கொண்டு எங்களிடம் வந்து, “நீங்களெல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே! பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்” என்றார்.

செல்லம்மா: ஆகா! நீங்கள் எல்லாருக்கும் சிஷ்யர்தான்! முதல் தெய்வமாகிற மடத்தின் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!

பாரதியார்: இதோ பார், செல்லம்மா. உன் அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே! அந்தச் சாரமில்லாத, உண்மையல்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவனுக்குரிய தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே!

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

மத்திய அரசு தொடர்பான கருத்து: மம்தா மீது காவல் நிலையத்தில் புகார்

வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் கொலைகளில் மத்திய அரசை தொடர்புபடுத்தி பேசியதாக குற்றஞ்சாட்டி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

தகுதியுள்ள நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

ஹைதராபாதில் சூடான் நாட்டவர் தனிமைப்படுத்தப்பட்டார்

எபோலா தொற்று அறிகுறி

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Nagapattinam

திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.

time to read

1 mins

June 05, 2026

Translate

Share

-
+

Change font size