Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

Dinamani Madurai

|

June 18, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.

- புலவர் வே.பதுமனார்

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.

வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.

கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

Dinamani Madurai

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Madurai

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Madurai

வெற்றியின் தொடக்கம் கனவு!

வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.

time to read

2 mins

January 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.

time to read

3 mins

January 01, 2026

Dinamani Madurai

பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி

தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்

time to read

1 min

January 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை சரிவு: பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 mins

January 01, 2026

Dinamani Madurai

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Madurai

கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு

பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Madurai

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Madurai

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back