試す - 無料

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

Dinamani Dindigul & Theni

|

October 05, 2025

"பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்..." என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை தான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கோள்காட்டி பேசத் தொடங்குகிறார் பிரகபல். 'ஜாக்கி' படத்தின் இயக்குநர் ஏற்கெனவே 'மட்டி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

- -ஜி.அசோக்

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்குக் தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில், மதுரைப் பக்கம் கிராமப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் வரையான தனிமை பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது. கிடைத்ததைச் சாப்பிட்டு வாழ்கிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். அப்போதுதான் ஒரு கிடா ஆட்டின் பின்னால் ஒரு லைன் பிடித்தேன். கிடாச் சண்டையைச் சுற்றி இருக்கும் அரசியல், அதன் மாந்தர்கள் இப்படி லைன் பிடித்துச் சுற்றினேன். பந்தயம் நடக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று எல்லாவற்றையும் பார்ப்பேன். அதனுள் இருக்கும் அரசியல், துரோகம், காதல் எல்லாவற்றையும் பிடித்து ஒரு கதை எழுதினேன். அதற்காகவே ஒரு கிடாவை வாங்கி வளர்த்து, பயிற்சிகள் அளித்து.... இப்படித்தான் இந்தக் கதை உருவானது. அந்த கிடாவின் மன நிலைப்பாட்டை சாமானிய வாழ்க்கையில் ஒருங்கிணைத்துப் பார்த்தேன். ஒரு கிடா நம் கிராமத்து மனிதர்களோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும்... அங்கேயிருந்துதான் இந்தக் கதைக்கான புள்ளி தொடங்கியது. கிடா, ஹீரோ, வில்லன், காதல் என இந்தக் கதை சுற்றி வரும். தன் ஊரைத் தாண்டாத ஒருவனுக்கு ஒரு கிடாவின் அன்பு கிடைத்தால்.... இதுதான் இதன் புள்ளி.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Dindigul & Theni

பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்

மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinamani Dindigul & Theni

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Dindigul & Theni

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size