Facebook Pixel சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்! | Dinamani Dindigul & Theni - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

Dinamani Dindigul & Theni

|

October 03, 2025

ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று 'டாக்டர்ஜி' என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவார் ஐந்தாறு இளைஞர்களுடன் தொடங்கிய பாதுகாப்புக்கான குழு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இன்று மகத்தான பேரியக்கமாக உருப்பெற்றிருக்கிறது. தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக அந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

எனது 16-வயதில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் (கூட்டத்தில்) கலந்து கொண்டபோது எனக்கு போதிக்கப்பட்ட கருத்து- தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக இந்தக் கட்டளை இருப்பதால் தான் ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய, மிகச் சிறந்த இயக்கமாக உருவாகியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். என்பது ஏதோ ஹிந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனி மனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணை அமைப்புகளும், பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு என்ன காரணம் என்று கேட்பவர்கள், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள் குறித்த புரிதல் இல்லாதவர்கள். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸாகதான் இருக்கும்.

1947 பிரிவினையைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் மேற்கு பஞ்சாபில் இருந்தும் (இப்போதைய பாகிஸ்தான்) கிழக்கு வங்கத்தில் இருந்து (இப்போதைய வங்கதேசம்) அகதிகளாக அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். அதன் சேவைகளைப் பார்த்துத்தான் காங்கிரஸ் கட்சியும் முகாம்களை அமைத்து அகதிகளுக்கு உதவ முன்வந்தது என்பது வரலாறு.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Dindigul & Theni

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Dindigul & Theni

2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி

ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size