試す 金 - 無料
மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்
Dinamani Dindigul & Theni
|September 12, 2025
கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்தது.
-
துபை, செப். 11:
இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், தங்களது முக்கிய தலைவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது. ஆனால், இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. கடந்தகால ஹமாஸ் தலைவர்கள் படுகொலைகளின்போதும் அந்த அமைப்பு மௌனமாகவே இருந்து வந்தது.
ஒருவேளை இந்தத் தாக்குதல் வெற்றி பெற்று, ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு அது முடிவாக இருக்காது. இரண்டு ஆண்டுகால போரைத் தாக்குப்பிடித்து, காஸாவில் இன்னும் சுமார் 20 பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது ஹமாஸ்.
காஸா சிட்டியை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தொடங்கியுள்ள புதிய தாக்குதல், 2023 அக்டோபர் 7 முதல் நடந்துவரும் போரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கும் 'முழுமையான வெற்றியை' கொடுக்குமா என்பது சந்தேகமே.
இதற்கு ஒரு காரணம், மக்களிடையே இரண்டறக் கலந்து, பிறகு மீண்டும் எழும் ஹமாஸின் திறன். ஹமாஸை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதை முழுமையாக ஒழித்து, மீண்டும் உருவாகாமல் தடுப்பது என்ற இஸ்ரேலின் இலக்கு, முடிவில்லாத போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனர்.
பேரிழப்புகளைத் தாங்கிய ஹமாஸ்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றில் ஹமாஸின் ஏறத்தாழ அனைத்து மூத்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதன் நீண்ட தூர ஏவுகணை கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அதன் அரசுக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.
ஈரான் மற்றும் அதன் பிற பிராந்திய கூட்டாளிகளும் கடும் பின்னடைவில் உள்ளன.
இத்தனைக்கு இடையிலும் ஹமாஸிடம் இன்னமும் ஆயிரக்கணக்கான படையினர் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கணித்துள்ளது. இதில் போரின்போது ஹமாஸில் இணைந்தவர்களும் அடங்குவர்.
このストーリーは、Dinamani Dindigul & Theni の September 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு
ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Translate
Change font size
