試す 金 - 無料
சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...
Dinamani Dindigul & Theni
|May 02, 2025
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.
அண்மையில் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீதான இந்தத் தாக்குதல் மிகுந்த கோழைத்தனமானது என்பதோடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுமாகும். சுற்றுலா செல்வோர் தாங்கள் சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள அரசியல் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
தீவிரவாத செயல்கள் மட்டுமின்றி, புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றையும் ஆராய்ந்த பின்னரே கொண்டு சுற்றுலா செல்லும் இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், சுற்றுலா சென்று திரும்ப வருவதற்கான வாகன வசதி, பாதுகாப்பான தங்குமிடம், செலவிடப்பட வேண்டிய கையிருப்புத் தொகை ஆகியன குறித்தும் சரியான திட்டமிடல் அவசியம்.
சுற்றுலா செல்ல விரும்புவோரை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் அரசுத் துறை நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான தனியார் முகமைகளும் நாடெங்கும் இயங்கி வருகின்றன. சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் தனியார் முகமைகள் மூலமாக சுற்றுலா செல்வோர் அம்முகமைகள் அளிக்கும் சேவையின் தரத்தை முன்கூட்டியே உறுதி செய்தல் அவசியம்.
புதிதாக ஓரிடத்துக்கு சுற்றுலா செல்லும் போது அங்குள்ள இயற்கை காட்சிகள், மக்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். வழக்கமான அன்றாட நிகழ்வுகளில் இருந்து நாம் மாறுபட்டு அனுபவிக்கும் சுற்றுலா சூழல் மனதுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
このストーリーは、Dinamani Dindigul & Theni の May 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Dindigul & Theni
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Dindigul & Theni
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Dindigul & Theni
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size