Facebook Pixel மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா | Dinamani Dharmapuri - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

Dinamani Dharmapuri

|

November 27, 2025

குடியரசுத் தலைவர் பெருமிதம்

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா; இது, நமது நாடாளுமன்ற அமைப்பு முறையின் வெற்றிக்கு உறுதியான சான்று' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

'மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின் லட்சியங்களைப் பறைசாற்றும் நாடாளுமன்றம், உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது' என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் (சம்விதான் சதன்) வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேசத்தின் அடையாளம்: விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின் பெருமைக்குரிய ஆவணம்; தேசத்தின் அடையாளம். காலனித்துவ மனநிலையைப் புறந்தள்ளி, தேசியவாத கண்ணோட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டும் ஆவணமாகும்.

இந்தியாவில் நாடாளுமன்ற அமைப்புமுறையை ஏற்பதற்கு ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இன்றளவும் பொருத்தமானவை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், ஆழமான அரசியல் சிந்தனைக்கு ஆக்கபூர்வ மரபையும் வளர்த்தெடுத்துள்ளனர். எதிர்கால ஒப்பீட்டு ஆய்வுகளின்போது, இந்திய ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பொன்னெழுத்துகளால் விவரிக்கப்படும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா வேகமாக பயணிப்பது, நமது நாடாளுமன்ற அமைப்புமுறையின் வெற்றிக்கு வலுவான சான்றாகும்.

Dinamani Dharmapuri からのその他のストーリー

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் விமர்சனம்

time to read

1 mins

May 11, 2026

Dinamani Dharmapuri

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு

17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினர் 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பத்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dharmapuri

பிளே-ஆஃப் நம்பிக்கையுடன் சென்னை

உர்வில் படேல், ஜேமி ஓவர்டன் அபாரம்

time to read

1 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size