Facebook Pixel இயற்கை காத்ததோர் எம்சங்க மூத்தோர் | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

இயற்கை காத்ததோர் எம்சங்க மூத்தோர்

Dinamani Chennai

|

September 21, 2025

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகளாகிய மாந்தர் படைத்துக்கொண்ட மொழி தமிழ். உலகத்து மாந்தர் எல்லாம் தாம் எண்ணியதைக் கையினால் உரை செய்த காலத்தே நாவை அசைத்துப் பேச்சை அமைத்துக் கொண்டனர் தமிழர். தமிழர்தம் வாழ்வியல் இலக்கணத்தைத் தொல்காப்பியர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிந்து வைத்துள்ளார். ஒழுக்க நெறிப்பட்ட வாழ்வைத் திணை என்றும், அத்திணை அகம், புறம் என்றும் வகுத்தார் தொல்காப்பியர். மாந்தர் வாழும் நெறிகளுக்கெல்லாம் முதன்மையானவை நிலமும் பொழுதுமே. இதனை,

- புலவர் வே. பதுமனார்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே

எனும் தொல்காப்பியத்தின் நான்காம் நூற்பாவால் அறியலாம்.

நிலத்தைக் 'காடுறை உலகம்', 'மைவரை உலகம்', 'தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்' என முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லியது தொல்காப்பியம். நிலம், பொழுது இவற்றின் சுழற்சியால் கருவான தெய்வம், உணவு, பறவை, பூ, விலங்கு, தொழில் முதலானவற்றைக் கருப்பொருள் என்றும், நிலத்துக்குரிய ஒழுக்க உணர்வை உரிப்பொருள் என்றும் குறித்தனர் நம் முன்னோர். இத்தகைய வாழ்விலக்கணம் உலகில் உள்ள எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் இல்லை.

உலகத்து உயிர்த்திரள் எல்லாம் உய்தி பெற வேண்டுமானால் விசும்பினின்று வீழும் நீர் வேண்டும். அது அருவி நீரானாலும், ஆற்று நீரானாலும், ஊற்று நீரானாலும், ஏன் உப்புக் கரிக்கும் கடல்நீரே ஆனாலும் உலகத்து உயிர்களுக்கு இன்றியமையாதனவே ஆகும்.

ஈரடிக்குறளால் உலகளந்த திருவள்ளுவர், நீரின்றி அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள் 20) எனவும்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. (திருக்குறள் 16)

எனவும் இயற்கை வழிப்பட்ட வாழ்வையே வான்சிறப்பு அதிகாரத்தில் அடையாளப்படுத்தியுள்ளார்.

ஒழுக்க நெறிப்பட்ட வாழ்வைத் திணை என்றும், அஃது அல்லாத வாழ்வை அஃறிணை என்றும் வகைப்படுத்திய தொல்காப்பியர், இயற்கையில் பூத்த பூக்களையே திணைகளின் பெயராக்கிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று குறித்தார். தமிழகமன்னர்கள்சேரர்-பனம்பூசோழர்-ஆத்திப்பூபாண்டியர்- வேப்பம்பூ அணிந்து போருக்குச் சென்றனர்.

ஒரு நாட்டுக்குக் காவலாக அரணாகத் தமிழர் இயற்கையையே ஆக்கிப் போற்றினர்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்

தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Translate

Share

-
+

Change font size