試す 金 - 無料
நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai
|October 17, 2024
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனர்.
-
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
பெட்ரோலை ஏற்றிக் கொண்டு கானோ மாகாணத்திலிருந்து ஜிகாவா மாகாணத்தின் மாஜியா நகர நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. சுமார் 110 கி.மீ. தொலைவுக்கு மேல் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அந்த பெட்ரோல் லாரி திடீரென வெடித்துச் சிதறி, மிகப் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது.
இதில் 97 பேர் உடனடியாக எரிந்து சாம்பலாகினனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் மேலும் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெட்ரோல் லாரி வெடித்து தீ அதிவேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பிச் செல்ல முடியவில்லை. எனவே, இந்த விபத்தில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நைஜீரியாவில், சாலை விதிகள் சரியாக பின்பற்றப்படாததால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
அதிலும், இதுபோன்ற விபத்துகளுக்குப் பிறகு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாளிகளில் எரிபொருளைச் சேகரிக்கும் வழக்கமும் அதிகமாகிவருகிறது. பெட்ரோல், டீசலுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதால் அவற்றில் விலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மும்மடங்காகியுள்ளன. இதன் காரணமாக, லாரி விபத்துகளைப் பயன்படுத்தி எரிபொருளை சேகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
このストーリーは、Dinamani Chennai の October 17, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!
'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.
1 min
May 13, 2026
Dinamani Chennai
உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா
அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு
முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
1 min
May 13, 2026
Dinamani Chennai
தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.
2 mins
May 13, 2026
Dinamani Chennai
போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்
அரசாணை வெளியீடு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Chennai
மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min
May 13, 2026
Translate
Change font size
