ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
DINACHEITHI - KOVAI
|June 05, 2025
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
-
இதுவரை நடந்த 17 சீசன்களை விட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 52 முறை 200 ரன்களுக்கு மேல் குவிப்பு (கடந்த ஆண்டில் 41 முறை), 1,294 சிக்சர் மற்றும் 2,245 பவுண்டரிகள் (கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி) விளாசியது முக்கியமான சாதனைகளாகும்.
மேலும் இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். மேலும் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் அதிக வேக சதம் அடித்த வீரராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா (ஐதராபாத்) சாதனை படைத்துள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 55 பந்தில் 141 ரன்கள் விளாசினார்.
ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் (23 வயது) தட்டிச் சென்றார். அவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்துள்ளார்.
ஹோம் மைதானத்தை விட மற்ற மைதானங்களில் 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்த அணியாக ஆர்சிபி சாதனை படைத்ததுள்ளது. ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் : சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் 717 ரன்கள் எடுத்தார். ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் இவர்தான்.
このストーリーは、DINACHEITHI - KOVAI の June 05, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - KOVAI からのその他のストーリー
DINACHEITHI - KOVAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - KOVAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - KOVAI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
Translate
Change font size

