試す 金 - 無料
கைமாறும் மணல் குவாரிகள்! அடுத்த மணல் ராஜா ரெடி!
Nakkheeran
|November 10-12,2024
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக மணல் குவாரிகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு தற்போது மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
மணல் குவாரிகளை மொத்தமாக தன் வசம் வைத்திருந்த எஸ்.ஆர். குரூப்ஸ் ராமச்சந்திரன் மீது ஏகப்பட்ட அதிருப்தி அடைந்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதனால் அவரிடமுள்ள மணல் குவாரிகளை கைமாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மணல் பிசினஸ் பெரும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. ஆறுகளிலும் ஏரி போன்ற நீர் நிலைகளிலும் மணலை யும், சவுடு மண் போன்றவற்றையும் அள்ளி, தமிழகம் முழுக்க அதிக விலைக்கு விற்று, மணல் மாஃபியாக் கள் கொழுத்த லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதே தமிழகம் கண்ட பிளாஷ்பேக் அனுபவம்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆறுமுகச்சாமி இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார். இவர்தான் ஜெ.வின் கொடநாடு பங்களாவைக் கட்டிக் கொடுத்தார் என்று. அப்போதே பேச்சு எழுந்தது. அந்த நாட்களிலேயே ஆறுமுகச் சாமியுடன் எஸ்.ஆர். டீம் கைகோத்து, இந்தத் தொழிலில் இறங்கியது.இதன்பிறகு கரிகாலன், ரத்தினம், ராமச் சந்திரன் ஆகிய மும்மூர்த்திகள் இந்த மணல் பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கத் தொடங் கினர். தி.மு.க. ஆட்சியில் இவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக மாறினர். இந்த நிலையில் மணல் விற்பனை குறித்து அதிக புகார்கள் எழுந்தபடியே இருந்தது. இவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் கூட்டணியால் சட்ட விரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மணல் குவாரிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த அதிரடி தொடர, பர பரப்பான தகவல்களும் வெளிவந்தபடியே இருந்தன.
இந்த ரெய்டு களின் போது, சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக முக்கிய ஆதாரங்களும், கணக்கில் வராத பெருமளவு பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதிரடி விசாரணைகளையும் நடத்தியது.
このストーリーは、Nakkheeran の November 10-12,2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Translate
Change font size
