कोशिश गोल्ड - मुक्त
கேட்பதை கொடுக்கும் இளங்காடு வைகுண்டவாசப் பெருமாள்!
Penmani
|October 2025
ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று வேதங்கள் கூறுகின்றன. அவரின் பெருமையை வேதங்களாலும் விவரிக்க இயலாது என்கிறது பிரபந்தம்.

ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து ஆதி ஆன வானவர்க்கும் ஆதியான ஆதி நீ. ஆதி ஆன வாணவர் அந்த காலம் நீ உரைத்தி ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே?
என்கிறார் திருமழிசை ஆழ்வார். பிரளய காலத்திற்குத் தலைவனான அவனை யாரால் அறிய முடியும்.
ஆனால் அறியாதவர்களுக்கும் அறியும்படியாகக் காட்சி தருகிறான் எம்பெருமான். காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவனே பக்தர்களின் இன்னல் தீர்க்க உருவமாகக் காட்சி அளிக்கிறான்.
அவ்விதத்தில் நின்ற திருக்கோலத்தில் வைகுண்ட வாசனாகக் காட்சி அளிக்கும் அவன் பக்தர்கள் வேண்டுவதை வேண்டும் விதத்தில் அளிக்கிறான். அதில் இளங்காடு, மையனூர் ஆகிய இடங்கள் சிறப்பாகக் கருதப் படுகின்றன.
இளங்காடுவைகுண்டவாசப்பெருமாள்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது இளங்காடு என்ற சிற்றூர். இங்கு ஸ்ரீபூமி நீளா சமேத ஸ்ரீவைகுண்டவாசப் பெருமாள் என்ற பெயரில் ஒரு பழமையான ஆலயத்தில் எழுந்தருளி இருக்கிறார் பெருமாள். முன் ஒரு காலத்தில் க்ஷேத்திர விசேஷமாக இருந்த தலம். மூவாயிரம் வருடங்களாக திருவாராதனம் நடைபெற்று வருகிறது.
பெருமாள் நின்ற நிலையில் ஏழரை அடி உயரத்தில் அழகான திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார். சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களைப் பின் பற்றிப் பின் விஷ்ணுவே பரமபுருஷன், மோட்சத்தைத் தருபவன் என்று உணர்ந்து திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.
அகோபில மடம் ஏழாவது பட்டம் ஜீயரான ஸ்ரீவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் இந்த ஊரில் பிறந்து, பெருமாளை மங்கள சாசனம் செய்துள்ளார்.
மகான்கள் வாசம் செய்த பூமி:
செஞ்சி ராஜகுருவான திருமலை நல்லான் சக்ரவர்த்தி சேஷாத்ரி ஆச்சார்யா என்னும் சுவாமிகள் இங்கு வந்து குடியேறி, அப்போது இருந்த சமணர்களை ஒழுங்கு படுத்தி அக்ரஹாரம் அமைத்துத் தன் வாரிசுகளைக் குடியமர்த்தினார்.
1315-ல் பிறந்த இவர் செஞ்சி அரச னால் இக்கோவிலுக்கு தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டு, இன்றுவரை அவரின் பரம்பரையினர் நிர்வாகம் செய்து வருகிறார்கள். ஒரு முறை ஆச்சார்யர் செஞ்சி, காஞ்சி இடங்களுக்குச் சென்று பெருமாளை சேவித்துவிட்டு வரும்போது ஒரு பூதம் அவரை மிரட்டியது என்றும், அதைத் தன் மந்திர சக்தியால் அடக்கித் தன் வீட்டுவேலை செய்ய வைத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.
यह कहानी Penmani के October 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Penmani से और कहानियाँ

Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025

Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025

Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025

Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025

Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025

Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025

Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size