कोशिश गोल्ड - मुक्त
பாடகி "பெயரில் மோசடி....
Kanmani
|May 14, 2025
தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட இந்த நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற நூதனமான மோசடிகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. இப்போது ஒருபடி மேலே போய் ஏ.ஐ. டெக்னாலஜியை பயன்படுத்தி பிரபலங்களின் உருவங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்யத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் ஏ.ஐ. மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்.
நிறைய இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் ஸ்ரேயா கோஷல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அக்னி பாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன எனத் தெரியாமல் பாடுகிறார்கள். நடனமும் ஆடுகிறார்கள்.
பாடல் நன்றாக இருப்பதாக என்னிடமே தெரிவிப்பது எனக்கு சங்கடமாக உள்ளது. இப்படிப்பட்ட பாடலை பாடியதற்கு வெட்கப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.
இப்போது ஏ.ஐ. மோசடி சர்ச்சை வேறு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிந்தி நடிகை கரீனா கபூர், ஸ்ரேயா கோஷலை மிர்ச்சி பிளஸ் என்ற நிகழ்ச்சிக்காக செய்யும் நேர்காணலில்... 'இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்த உங்கள் வருமானத்தை எப்படி எல்லாம் பெருக்குகிறீர்கள்' என கேட்கிறார்.
அதற்கு ஸ்ரேயா கோஷல், “பாடல் வருமானத்தின் மூலம் மட்டும் எனக்கு பணம் கிடைக்கவில்லை. "லோவரியோனிக்ஸ் லிக்விடிட்டி என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் அடிப்படையிலான வர்த்தக தளத்தில் முதலீடு செய்து நிறைய பணம் சம்பாதிக்கிறேன். ஒரு நாளைக்கு எனக்கு ரூ.1.8 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதற்கு நான் பெரிதாக மெனக்கெடவும் தேவையில்லை” என்று கூறுகிறார்.
அது எப்படி சாத்தியமாகும்... என கரீனா கபூர் கேட்க, ஸ்ரேயா கோஷல் லைவ் டெமோ செய்து காட்டுகிறார்.
அதன்படி ஏ.ஐ. டிரேடிங் பிளாட்பார்மில் குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் முதலீடு செய்து காண்பித்து அடுத்த 30 நிமிடங்களில் ரூ.6,715 கூடுதல் வருமானம் பெறுகிறார்.
இந்த நேர்காணல் நிகழ்ச்சி வெளியான உடனே, எங்கே இருக்கும் வேலையை விட்டு விட்டு எல்லா அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் ஏ.ஐ. டிரேடிங் செய்வதற்காக கிளம்பி விடுவார்களோ... என அரசாங்கமே பயப்படுகிறது என்பது போல செய்திகள் பரவத் தொடங்குகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக ஸ்ரேயா கோஷல் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால், அவரை கைது செய்ய அரசு உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் விளைவாக, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் ஊடகங்களை அணுகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... என்ற செய்தி தீயாக பரவத் தொடங்கியது.
यह कहानी Kanmani के May 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
