कोशिश गोल्ड - मुक्त
கலவரத்தில் பலி 30 ஆக உயர்வு: நேபாளத்தில் முன்னாள் நீதிபதி தலைமையில் இடைக்கால ஆட்சி! போராட்டக்காரர்கள் முழு ஆதரவு !!
Malai Murasu
|September 11, 2025
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய இளைஞர்கள் போராட்டம், 2 நாட்களில் ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திட்டது. நாடாளுமன்றம் தொடங்கி பிரதமர், அமைச்சர்களின் வீடுகள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
-
நேபாள பிரதமராக இருந்த சர்மா ஒலி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ராணுவம் தற்போது ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி சட்டம் ஒழுங்கை காக்க முற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேச பாணியில் நேபாள முன்னாள் தலைமை நீதிபதி சுஷீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க போராட்டக்காரர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்ளாத பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ், லிங்க்ட்இன், ஸ்னாப்சாட், ரெடிட், த்ரெட்ஸ், வீசாட், க்ளப்ஹவுஸ் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை அதிரடியாக முடக்கினார்.
இந்த விவகாரம் ஜென் இசட் எனப்படும் இளம் தலைமுறையினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடை செய்ய வேண்டியது சமூக வலைதளங்களை அல்ல, ஊழல் அரசைத்தான் என்று கூறி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தடை உத்தரவையும் மீறி தேசிய கொடிகளை கைகளில் ஏந்திக்கொண்டு இளைஞர்கள் பல்வேறு நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முதல் நாளில் 20 பேர் பலியாகினர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஆடிப்போன சர்மா ஒலி அரசு சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை நீக்கியது. ஆனாலும் போராட்டம் அடங்கவில்லை.
"ஊழல் புரியும் பிரதமர் சர்மா ஒலி அரசை கவிழ்க்கும் வரை போராட்டம் ஓயாது" என்று கூறி இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேலும் சிலர் கொல்லப்பட்டதால், ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களை சூறையாடி தீ வைக்கத் தொடங்கினர். பிரதமர் சர்மா ஒலி, உள்துறை மந்திரி ரமேஷ் லோகாக், நேபாள முன்னாள் பிரதமர்கள் பிரசாந்தா, ஜலநாத் கனால் மற்றும் ஷேர் பகதூர் துபா உள்ளிட்ட அனைவரது வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.
यह कहानी Malai Murasu के September 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Malai Murasu से और कहानियाँ
Malai Murasu
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்!
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு !!
1 mins
June 30, 2026
Malai Murasu
சுனாமி குடியிருப்பில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்!
தொற்று நோயால் பொதுமக்கள் பாதிப்பு !!
1 min
June 30, 2026
Malai Murasu
கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 28 ஆண்டு சிறை தண்டனை!
கேரள விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!
1 mins
June 30, 2026
Malai Murasu
அடுத்த மாதம் 10, 11-ஆம் தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்!
பலியான 41 பேரின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார் !!
1 min
June 30, 2026
Malai Murasu
த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறுமின்றி நீடிக்கும்!
மு.க.ஸ்டாலினுக்கு, திருமாவளவன் பதில்!!
1 mins
June 30, 2026
Malai Murasu
வடமாநில ஊழியர்வெட்டிக் கொலை!
மேற்கு வங்க வாலிபருக்கு வலைவீச்சு !!
1 min
June 30, 2026
Malai Murasu Chennai
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் வாகன விபத்தில் முதியவர் பலி!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர், குடும் பியாண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த அப்துல்ஹாதிக் (வயது 75) நேற்று பைக்கில் கோவளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
1 min
June 30, 2026
Malai Murasu Chennai
திருத்தணியில் விபத்து: இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு!
திருத்தணியில் இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Chennai
முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா!
முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
1 min
June 30, 2026
Malai Murasu Chennai
மாணிக்கம் தாகூருக்கு என்.ஆர். தனபாலன் வாழ்த்து!
தமிழ்நாடுகாங்கிரஸ்கட் சிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்கும் மாணிக் கம்தாகூருக்கு பெருந்தலை வர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
June 30, 2026
Translate
Change font size
