कोशिश गोल्ड - मुक्त
மக்களாட்சியின் தாய் இந்தியா!
Dinamani Vellore
|August 06, 2025
இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி பண்டைய கோயில் நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று கடந்த 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மேக்னா கார்ட்டா' என்கிற பிரிட்டன் சாசனத்துக்கு முன்பே, அத்தகைய நடைமுறை இந்திய மக்களாட்சியில் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம், மறந்துபோன வரலாற்று உண்மையை அவர் நினைவுபடுத்தினார்.
தனது பேச்சின்போது அவர் பெருமிதம் தெரிவித்த பண்டைய வாக்குப் பதிவு முறை என்பது என்ன? அது 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள் ஆட்சியில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வியக்கத்தக்க பாணியை விவரிக்கிறது. அதேவேளையில் பூர்விகமாகவும், தொன்மையாகவும், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்த மக்களாட்சி மரபின் பெருமையை மீட்டெடுப்பதே அதில் உள்ள ஆழமான செய்தியாகும்.
இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், 'அன் அன்டாக்குமென்டன்ட் வண்டர்-தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இண்டியன் எலெக்ஷன் (2014)' என்ற எனது நூலில் நான் எழுதியிருந்தேன். மக்களாட்சிகோட்பாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் புதிதல்ல; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அது இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் இருந்தது. சிறிய சமுதாயங்கள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் விவாதங்கள் மூலம், முடிவு எடுப்பதில் பங்குகொள்வது இயல்பான வழக்கமாக இருந்தது.
கிராம சபைகளின் பங்கு குறித்தும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் எவ்வாறு நாட்டை மேலும் திறம்பட ஆட்சி செய்வது என்பதையும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் விவரித்துள்ளார். அந்தக் காலத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சொத்து மற்றும் கல்வி முக்கியத் தகுதிகளாக கருதப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ, கறைபடிந்தவர்களாகவோ, ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாகவோ கருதப்பட்டால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
यह कहानी Dinamani Vellore के August 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Vellore से और कहानियाँ
Dinamani Vellore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Vellore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Vellore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Vellore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size