कोशिश गोल्ड - मुक्त
காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!
Dinamani Tiruvarur
|June 27, 2025
காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.
1985, ஜூன் 23-இல் ஏர் இந்தியா-182 ‘கனிஷ்கா’ விமானம் லண்டன் வழியாக புது தில்லி, மும்பையை இறுதி இலக்காகக் கொண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் 31,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது வெடித்துச் சிதறியது. சரக்குகள் வைக்கும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து விமானத்தில் இருந்த 329 பேர் உயிரிழந்தனர்; இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் உள்பட கனடா குடிமக்கள் 268 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 27 பேர், 22 இந்தியர்கள், விமான ஊழியர்கள் என அதில் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முந்தைய மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். கனடா வரலாற்றிலேயே மிகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தை இலக்கு வைத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் நரிட்டா விமான நிலைய சரக்குச் சேமிப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தவறுதலாக முன்கூட்டியே வெடித்து இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகப் பின்னர் நடைபெற்ற விசாரணையில், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சீக்கியப் பிரிவினை அமைப்பான ‘பப்பர் கல்சா’ இருந்தது தெரியவந்தது.
यह कहानी Dinamani Tiruvarur के June 27, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள்: கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்
தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி வெளிச்சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Tiruvarur
தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Dinamani Tiruvarur
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Tiruvarur
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Translate
Change font size
