Facebook Pixel பூவுலகு எனும் நம் விமானம் | Dinamani Tiruvallur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பூவுலகு எனும் நம் விமானம்

Dinamani Tiruvallur

|

July 19, 2025

விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

- சுப. உதயகுமாரன்

பூமியை விட்டு வெளியே சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் 'பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்' என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1937-இல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூலில் எடுத்தாண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்று அழைத்து, அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணி யும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இதைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.

கென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு 'முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம்' எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர், 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த ஊ தாண்ட் தனது 'பூமி நாள்' உரையில் குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாள்கள் மட்டுமே வந்து சேரட்டும் என்று வாழ்த்தினார்.

சர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.

நமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 823 கோடி மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.

Dinamani Tiruvallur

यह कहानी Dinamani Tiruvallur के July 19, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

இடதுசாரிகள், பாமக, விசிக வலியுறுத்தல்

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்?

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

கோயில் நிதி பயன்பாடு: சேகர் பாபு-அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்

அடிப்படை வசதிகள் இல்லாத குன்னூர் விநாயகர் கோயிலுக்கு ரூ.10 கோடியில் வாகன நிறுத்தம் கட்ட முந்தைய திமுக அரசு உத்தரவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size