कोशिश गोल्ड - मुक्त
இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!
Dinamani Tiruppur
|August 20, 2025
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,
பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பது தான் அது.
இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்தப் புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்.
உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
यह कहानी Dinamani Tiruppur के August 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
சபலென்கா - வோண்ட்ருசோவா
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.
1 mins
September 02, 2025
Dinamani Tiruppur
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு
உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனிநபர் ஹோட்டலுக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை
ரிசர்வ் வங்கி
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
சாரா நர்ஸிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை
தாராபுரத்தில் உள்ள சாரா நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்
ரத்தசோகை நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க காங்கயம் அருகே உள்ள நெய்க்காரன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்
வரும் டிசம்பர் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
1 min
September 02, 2025
Dinamani Tiruppur
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min
September 02, 2025
Translate
Change font size