कोशिश गोल्ड - मुक्त
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
Dinamani Tirunelveli
|August 27, 2025
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
உண்மைதான். எல்லா ஊர்களிலும் சிற்றுண்டி ச்சாலைகளும் உணவு விடுதிக ளும் இருக்கத்தானே செய்கின்றன. அது மாதிரி... சொல்லி முடிக்கவிடவில்லை. அதெப்படி? உணவுவிடுதியும் புத்தகக் கடையும் ஒன்றாக முடியுமா?
ஏன் முடியாது? இரண்டும் பசியாற்று கிற இடம்தானே? முன்னது வயிற்றுப் பசி போக்குவது. பின்னது அறிவுப்பசி ஆற்று வது. இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப் பிடுகிற உணவு விடுதிகளைவிட, 'பார்சல்' கொடுக்கிற விடுதிகளுக்குத்தானே மவுசு. பார்த்த புத்தகங்களையே பார்ப்பதும், படித்த புத்தகங்களைத் திரும்பப் பார்ப்ப தும் ஆயாசமாயிருக்கிறது. ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்ப தற்குள் புதிய புத்தகம் வாங்க வேண்டுமா? என்று தோன்றுகிறது.
உண்பதும் வாசிப்பதும் ஒன்றாகிவிடுமா? ஆக வேண்டும். பிறந்தது முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் எப்படி உணவுதவிர்க்க முடியாதோ, அப்படித்தான் கல்வியும்.
அன்றாட இயக்கத்துக்கு உணவு எவ்வ ளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன் றியமையாதது அன்றாட வாசிப்புக்குப் புத்தகமும்; வாழ்க்கையின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கு எத்தனை வசதியான பொருள்கள் பயன்படுகின்றனவோ, அது போல், மனத்தை இலகுவாக்குவதற்கு எத் தனையோ புத்தகங்கள் பயன்படுகின்றன.
வாசிப்பு, படிப்பாகி, படிப்பு, கற்றலாக வளர்ச்சி அடைய வேண்டும்.
கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லிய தும் அமைதியானார் நண்பர். யார் ஒருவ ராலும் தனக்காகவே வாழ முடியாது. அது போல், யாராலும் தனக்குத்தானே பேசிக் கொள்ள முடியாது; எழுதிக் கொள்ள முடியாது; பேச முடியாத நாள்களில் பேச நபர்கள் கிடைக்காத நேரங்களில் பேச்சுத் துணைக்குப் புத்தகங்கள் கூட வரும்; பேசும்; பேச வைக்கும்; பேசாமல் யோசிக்கவும் வைக்கும். போக முடியாத இடங்களுக்கு மனதளவில் பயணிக்கவும், நேருற அனுபவிக்க முடி யாத பல உணர்வுக ளைத் துய்த்துப் பெற்றுக்கொள்ளவும் புத் தகங்கள் துணை செய்யும்; நாம் வெளியுல கில் நடந்தும், வாகனங்களில் பயணித்தும் கடக்கிற தொலைவுகளுக்கு இணையாக மனதளவில் பயணிக்க உதவும் வாகனங் கள் புத்தகங்கள். அதில் ஊன்றுகோலா கும் புத்தகங்களும் உண்டு; விமானங்களா கும் புத்தகங்களும் உண்டு. மறதி நோய்க்கு மகத்தான மருந்து புத்தகம்தான்.
यह कहानी Dinamani Tirunelveli के August 27, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size