कोशिश गोल्ड - मुक्त
நல்வழிப் பயணம்-சமூகமும் பொறுப்பு!
Dinamani Tirunelveli
|August 25, 2025
பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு போட்டிகளை நடத்தினார். கட்டுரைப் போட்டி, விளம்பரச் சிற்றேடு தயாரிப்பு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்கு நடுவராக அவர் அழைக்கப்பட்டார்.
நிறைய மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுதியிருந்தனர். அனைவரும் சிறப்பாக எழுதியிருந்தனர். அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனைகளையும், கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை விதமான போதைப்பொருள்கள் கிடைக்கின்றன என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. போதைப்பொருள் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று அனைவரும் வலியுறுத்தினர்.
மாணவர்களுக்கு சுயக்கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் அவசியம்; சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது சிறப்பு. விளம்பரச் சிற்றேடு தயாரிப்புப் போட்டியிலும், ஓவியப் போட்டியிலும் கலந்துகொண்டனர். வார்த்தைகளைவிட வண்ணங்கள் அதிகம் பேசின. தலைப்பு - போதைப்பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள். போதைப்பொருள் பயன்பாட்டால் நம் நாடு கலங்கிப் போய், கருத்துப் போயிருப்பதாக ஒரு படம்; எதிர்காலம் இருண்டு போகும் என்ற எச்சரிக்கை படம் - என அருமையாக வரைந்திருந்தனர்.
அவர்களின் உள்ளத்தில் இருந்த உணர்வு; நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தெளிவு; போதைப்பொருள் கூடாது என்ற மன உறுதி அவர்களிடம் வெளிப்பட்டது. இந்தப் பிள்ளைகள் எந்தக் காரணத்திற்காகவும் போதைப்பொருளைத் தொட மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பதின்பருவப் பிள்ளைகளின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டோம் என்றால், அவர்களைக் காப்பாற்றிவிட்டோம் என்று மனநிறைவு கொள்ளலாம். இந்தக் காலப் பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் கடலில் ஒரு துளி அல்ல, ஒரு துளியில் அடங்கியுள்ள கடல்.
எதற்குப் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. சரியான மேய்ப்பர் இருந்தால் மந்தை ஆடுகள் வழிதவறிப் போகாது என்பது போல, சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளம் தலைமுறை திசைமாறிப் போகாது. ஆகவே, இந்த மாதிரி போட்டிகளை நடத்தினால் அவர்களை யோசிக்க வைக்க முடியும்.
यह कहानी Dinamani Tirunelveli के August 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size