कोशिश गोल्ड - मुक्त
வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள்
Dinamani Tiruchy
|August 17, 2025
வரலாற்றுச் சிறப்புடைய ‘பேளூர்’, அதன் சுற்றுப்புறக் கிராமங்களான செக்கடிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, புழுதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் மன்னர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகே வசிஷ்ட நதிக்கரையில்தான் இந்த ஊர்கள் அமைந்துள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்டநதியானது ‘நிவா’ நதி என்று அழைக்கப்பட்டுள்ளது. பேளூரை ‘திருவேள்வியூர்’, ‘வேள்வியூர்’ என்ற பெயர்களில் பல சிற்றரசர்கள், சோழர்கள், நாயக்கர்களின் பேரரசு கீழ் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களின் அறப்பணிகள், கொடைகள், மேற்கொண்ட போர்கள், சூடிய வெற்றிகள், நீர்மேலாண்மை போன்றவற்றை விளக்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:
அங்காளம்மன் கோயிலில் அடிப்பகுதி உடைந்த நிலையிலுள்ள ஒரு கல்வெட்டில், எட்டு வரிகள் உள்ளன. கடைசி மூன்று வரிகள் சிதைந்துள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்…’ என கல்வெட்டுத் தொடங்குகிறது. இந்த அடைமொழி முதலாம் பராந்தகச் சோழனுக்கு உரியது. அவரது 41-ஆவது ஆட்சி ஆண்டில், அதாவது 948-இல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் பத்தாம் நூற்றாண்டில் பேளூர் பகுதியானது சோழர்களின் ஆட்சியில் இருந்துள்ளதை அறியலாம்.
நரசிங்கபுரத்தில் உள்ள கல்வெட்டில் கோயிலுக்கு விளக்கு எரிக்கத் தானம் கொடுத்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் பராந்தகச் சோழனுக்குப் பிறகு ஆட்சி செய்த இரண்டாம் ஆதித்யனின் 959-ஆம் ஆண்டு கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். வீரபாண்டியனை ஆதித்ய கரிகாலன் தோற்கடித்ததும் தலையை வெட்டி எடுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Tiruchy के August 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruchy से और कहानियाँ
Dinamani Tiruchy
'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு
இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
3 mins
June 13, 2026
Dinamani Tiruchy
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tiruchy
பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
சில்லறை பணவீக்கம் 3.93%
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Translate
Change font size

