कोशिश गोल्ड - मुक्त
சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!
Dinamani Tenkasi
|October 03, 2025
ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.

1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று 'டாக்டர்ஜி' என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவார் ஐந்தாறு இளைஞர்களுடன் தொடங்கிய பாதுகாப்புக்கான குழு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இன்று மகத்தான பேரியக்கமாக உருப்பெற்றிருக்கிறது. தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக அந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
எனது 16-வயதில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் (கூட்டத்தில்) கலந்து கொண்டபோது எனக்கு போதிக்கப்பட்ட கருத்து- தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக இந்தக் கட்டளை இருப்பதால் தான் ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய, மிகச் சிறந்த இயக்கமாக உருவாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். என்பது ஏதோ ஹிந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனி மனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணை அமைப்புகளும், பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு என்ன காரணம் என்று கேட்பவர்கள், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள் குறித்த புரிதல் இல்லாதவர்கள். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸாகதான் இருக்கும்.
1947 பிரிவினையைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் மேற்கு பஞ்சாபில் இருந்தும் (இப்போதைய பாகிஸ்தான்) கிழக்கு வங்கத்தில் இருந்து (இப்போதைய வங்கதேசம்) அகதிகளாக அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். அதன் சேவைகளைப் பார்த்துத்தான் காங்கிரஸ் கட்சியும் முகாம்களை அமைத்து அகதிகளுக்கு உதவ முன்வந்தது என்பது வரலாறு.
यह कहानी Dinamani Tenkasi के October 03, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tenkasi से और कहानियाँ

Dinamani Tenkasi
பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!
எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.
2 mins
October 13, 2025
Dinamani Tenkasi
மதிப்புக்கு உரிய மதிப்பு!
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.
3 mins
October 13, 2025
Dinamani Tenkasi
வரலாறு படைத்தார் வசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.
1 min
October 13, 2025
Dinamani Tenkasi
மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
1 min
October 13, 2025
Dinamani Tenkasi
அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
October 13, 2025

Dinamani Tenkasi
மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’
குல்தீப், ஜடேஜா அபாரம்
1 min
October 13, 2025
Dinamani Tenkasi
கோகோ கெளஃப் சாம்பியன்
சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
October 13, 2025
Dinamani Tenkasi
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
October 13, 2025
Dinamani Tenkasi
அன்புள்ள ஆசிரியருக்கு...
வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.
1 mins
October 13, 2025

Dinamani Tenkasi
பெண் கல்வியின் அவசியம்
சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 12, 2025
Translate
Change font size