कोशिश गोल्ड - मुक्त
எங்கு போய் முட்டிக்கொள்வது?
Dinamani Tenkasi
|February 28, 2025
இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.
கல்வி என்பது முற்றிலும் மாநில அரசின் பொறுப்பிலேயே இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அது இணை அதிகாரப் பட்டியலுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டது. அது குறித்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முணுமுணுக்கக் கூட இல்லை. அதற்குப் பிறகு கங்கையிலே பெருவெள்ளம் ஓடி வடிந்தும் விட்டது.
இந்தியையும் கற்க வேண்டும்; அதுவும் கட்டாயம் என்னும் நிலை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு, அதற்குப் பேரெதிர்ப்பு கிளம்பி, அது இங்கே கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. கல்வி வழியாகத்தானே இந்தி ஊடுருவ முடியும்?
ஆயினும் இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்னும் மைய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. ஆகவே அது இந்தி பேசாத மக்களின் தலைமீது என்றென்றும் தொங்கிக்கொண்டிருக்கிற வாளாகவே இருந்து வருகிறது.
இந்தியா ஒன்றாக இருந்த நாடில்லை. அதைத் தன் துப்பாக்கி முனையில் இணைத்தான் வெள்ளைக்காரன். அப்போதும் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் அயலாகவே இருந்தனர். ஆங்கிலக் கல்வியைப் புகுத்தினான் வெள்ளைக்காரன். இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். அதுதான் வெள்ளையனின் அதிகாரத்தைத் தாண்டி காஷ்மீரையும் குமரி முனையையும் மனக்கலப்பாலும் கருத்துக் கலப்பாலும் ஒருமைப்படுத்தியது.
எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம். அதுதான் இந்தியாவைச் சிதறாமல் காக்கும்.
வெள்ளைக்காரன் போகும்போது இந்தியா சிதறிவிடுமோ என்று காந்தி அஞ்சினார்.
இந்தியா சிதறாமல் காத்தது காந்தியின் மொழிவழித் தேசியக் கொள்கைதான். இதை 1920-இலேயே நடைமுறைப்படுத்தி விட்டார் காந்தி. தமிழ்நாடு காங்கிரசு, வங்காளக் காங்கிரசு என்று பிரித்துக் காட்டி, நாளைய இந்தியா இதுதான் என்று அடையாளப்படுத்தி, நாட்டைச் சிதறவிடாமல் காத்தவர் காந்திதான்.
यह कहानी Dinamani Tenkasi के February 28, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tenkasi से और कहानियाँ
Dinamani Tenkasi
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Tenkasi
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tenkasi
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tenkasi
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tenkasi
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Tenkasi
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Tenkasi
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tenkasi
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tenkasi
இன்று பாஜக கூட்டணி கூட்டம்
பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tenkasi
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Translate
Change font size

