Facebook Pixel தமிழில் மட்டுமே பேசுவோம்! | Dinamani Salem - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

தமிழில் மட்டுமே பேசுவோம்!

Dinamani Salem

|

October 28, 2025

மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.

- சோம வள்ளியப்பன்

கூடுதலாக, ‘தமிழை பிற சொற்கள் கலப்பின்றி பேசுங்கள் என்பதையும், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்' என்பதையும் சொன்னேன். அந்த வேண்டுகோளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போதைய இராக், சிரியா, துருக்கி தேசங்களின் சில பகுதிகளுக்கு முந்தைய பெயர், மெசபடோமியா. மிகத் தொன்மையான நாகரிகம் பிறந்த இடம். அந்த மக்கள் அப்போது பேசிய மொழி, சுமேரியா. இப்போது அந்த மொழி வழக்கில் இல்லை.

ரோமாபுரி பெரும் பேரரசு; அதுவும் மிகத் தொன்மையான நாகரிகம் கொண்டது. அந்த மக்கள் பேசியது, லத்தீன் மொழி. தற்காலத்தில் சில லத்தீன் சொற்கள் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களாக இருக்கிறது. சில மத நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்படுகிறது. மற்றபடி லத்தீன் மொழியும் பேச ஆளில்லாமல் தற்போது பேச்சு வழக்கில் இல்லை.

அதேபோல தொன்மையான பல கிரேக்க மொழிகள் வழக்கொழிந்து விட்டன. சீனாவில் ஒரு காலத்தில் பலராலும் பேசப்பட்ட மன்சு மொழி பேசுபவர்கள் இப்போது மிகக் குறைவு. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனிய தீவில் புழக்கத்தில் இருந்த அனைத்து மொழிகளும் ஆங்கிலேயர் காலனி ஆட்சி செய்த போது அழிந்துவிட்டன.

யுனெஸ்கோவின் கணக்குப்படி தற்போது உலகின் பல பகுதிகளில் மொத்தம் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதே யுனெஸ்கோவின் கணிப்புப்படி இவற்றில் 40% அதாவது, 2,800 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. பேசுபவர்கள் இல்லாமல் போக, அந்த மொழிகள் காணாமல் போய்விட்டன.

அந்த 40 சதவீதத்தில் தமிழ் வராமல் இருக்க வேண்டும். இது என்ன அதிசயம்! நாம் தமிழில் பேசிக் கொண்டு தானே இருக்கிறோம்? என்று சிலர் யோசிக்கலாம். ‘நான் சொல்வது ரைட்டு தானே? நீங்க அக்ரி பண்ணலையா? சம் பீப்பிள் வில் நாட் அக்ரி. தட் இஸ் ஓகே' என்பது போலத்தான் தற்போது தமிழில் பலரும் பேசுகிறார்கள்.

அவர்கள் பேசுவது தமிழ் இல்லை; ஆனால், ‘கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்களும் இன்னதென்று அறியார்' என்று பாரதியார் பாடியதைப் போல, தாங்கள் பேசுவது தமிழ் இல்லை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மற்ற மொழிச் சொற்கள் கலவாமல் அவர்களால் தமிழ் பேசவே முடியாது. மற்ற மொழிகளில் முதன்மையானது மட்டும்தான் ஆங்கிலம். எனவே, ஆங்கிலம் தவிர சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டுமல்ல; இன்னும் சில பிற மொழிச் சொற்களும் தாராளமாக தமிழ் பேசுபவர்களிடம் கலந்திருக்கின்றன.

Dinamani Salem

यह कहानी Dinamani Salem के October 28, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Salem से और कहानियाँ

Dinamani Salem

Dinamani Salem

4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர், துணைமேயர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வையொட்டி, தருமபுரம் ஆதீனம் சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்

தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Salem

மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?

time to read

1 mins

June 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

எல்பிஜி விலை உயர்வு: மத்திய அரசு விளக்கம்

'உலக அளவில் இந்தியாவில் குறைவு'

time to read

1 mins

June 08, 2026

Dinamani Salem

இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

time to read

1 min

June 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size