कोशिश गोल्ड - मुक्त
பேரவையில் கூச்சல் - குழப்பம்: அதிமுகவினர் வெளியேற்றம்
Dinamani Salem
|March 29, 2025
சட்டப்பேரவையில் நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
-
சென்னை, மார்ச் 28: மேலும், அவர்களை நாள் முழுவதும் பேரவையிலிருந்து நீக்கி வைப்பதாகவும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சில முக்கிய பிரச்னைகளை எழுப்ப அனுமதி வேண்டும் என்றார். அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இது பற்றி அறிவிப்பே தரவில்லை எப்படி அனுமதிக்க முடியும் என மறுப்புத் தெரிவித்தார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேச அனுமதி கோரினார்.
துரைமுருகன் கேள்வி: அவை முன்னவர் துரைமுருகன் கூறுகையில், இவ்வாறு பேச அனுமதி கோருவது எந்த வகையில் சரியானது? ஒரு பிரச்னையை எழுப்ப வேண்டுமெனில் முன்பே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவினர் எத்தனை மணிக்கு தகவல் கொடுத்தார்கள்? என்று பேரவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளித்த அவைத் தலைவர், அவை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக தகவல் தர வேண்டும் என்பது மரபாக உள்ளது. ஆனால், இன்றைக்கு காலை 9.18 மணிக்கு என்னைச் சந்தித்த எதிர்க்கட்சி கொறடா, காவல் துறை பற்றி ஒரு பிரச்னையை நேரமில்லாத நேரத்தில் எழுப்பப் போகிறோம் என்றனர். விஷயத்தைச் சொல்லாமல் எப்படி அனுமதிக்க முடியும் என்று அப்போதே கேள்வி எழுப்பினேன் என்றார்.
ஓர் உறுப்பினர் என்ன பேசப் போகிறார் என்பதை முன்கூட்டியே அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தகவல்கள், புள்ளிவிவரங்களைத் திரட்டி பதில் சொல்ல முடியும். தகவல்கள், புள்ளி விவரங்கள் இல்லாவிட்டால் பிரச்னையை எடுக்கக் கூடாது என்று அவை முன்னவர் உறுதிபடத் தெரிவித்தார்.
यह कहानी Dinamani Salem के March 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Salem से और कहानियाँ
Dinamani Salem
ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Salem
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Salem
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Salem
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Salem
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Salem
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Salem
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Salem
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Salem
பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்!
பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Salem
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Translate
Change font size

