कोशिश गोल्ड - मुक्त
பணிவின் எல்லை
Dinamani Pudukkottai
|October 19, 2025
பெரியபுராணம் சிவனடியார் பெருமையைப் பாடும் சிறப்பினைப் படிக்கும் பிற சமயத்தினர் 'இப்படி நம் சமயத்தில் அடியார்களின் பெருமையைப் பாடும் அழகிய நூல் ஒன்று இல்லையே!' என்று ஏங்குகின்றனர். பெரிய புராணத்திற்கு முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வகை நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூலாசிரியர்களையும் விஞ்சும் வகையில் சேக்கிழார் அடியார்கள் மீது காட்டும் மரியாதை அமைந்துள்ளது.
திருத்தொண்டத் தொகை அறுபது தனியடியார்களையும் ஒன்பது தொகை அடியார்களையும் பாடியுள்ளது. சுந்தரர் தனியடியார்களுள் இருபதின்மரைக் குறிக்கும்போது 'அன்' விகுதியிட்டு ஒருமையில் குறித்துள்ளார். சான்றாக,
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்,
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்,
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்,
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்,
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
என்று வருவது காணலாம். 'அன்' விகுதி பெறாத பெயர்களை, 'மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்' 'மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்' என்று ஒருமையில் சுட்டும் வகையில் அடைமொழிகளில் 'அன்' விகுதியினைச் சேர்த்துள்ளார்.
ஏனைய அடியார்களை, 'விறன்மிண்டர்க் கடியேன்', 'எறிபத்தர்க் கடியேன்', 'கண்ணப்பர்க் கடியேன்' 'ஆனாயர்க் கடியேன்', என்று பன்மையில் பாடியுள்ளதாகத் திருத்தொண்டத்தொகைப் பதிப்புகள் பலவற்றில் காணப்படுகின்றன.
यह कहानी Dinamani Pudukkottai के October 19, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Pudukkottai से और कहानियाँ
Dinamani Pudukkottai
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
காவலர்கள் மீது வழக்கு தொடுக்கும் விவகாரம்: தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் அனைத்து நிலை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடுக்க அரசின் முன்அனுமதி தேவை என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
திமுக கூட்டணியில் நீடிப்பதா ?: ஜூன் 27-இல் மதிமுக முடிவு
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்துவரும் 27- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Listen
Translate
Change font size

