कोशिश गोल्ड - मुक्त

மக்களாட்சியின் தாய் இந்தியா!

Dinamani Puducherry

|

August 06, 2025

இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.

- எஸ்.ஒய். குரேஷி

கடந்த ஜூலை 27-ஆம் தேதி பண்டைய கோயில் நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று கடந்த 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மேக்னா கார்ட்டா' என்கிற பிரிட்டன் சாசனத்துக்கு முன்பே, அத்தகைய நடைமுறை இந்திய மக்களாட்சியில் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம், மறந்துபோன வரலாற்று உண்மையை அவர் நினைவுபடுத்தினார்.

தனது பேச்சின்போது அவர் பெருமிதம் தெரிவித்த பண்டைய வாக்குப் பதிவு முறை என்பது என்ன? அது 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள் ஆட்சியில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வியக்கத்தக்க பாணியை விவரிக்கிறது. அதேவேளையில் பூர்விகமாகவும், தொன்மையாகவும், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்த மக்களாட்சி மரபின் பெருமையை மீட்டெடுப்பதே அதில் உள்ள ஆழமான செய்தியாகும்.

இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், 'அன் அன்டாக்குமென்டன்ட் வண்டர்-தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இண்டியன் எலெக்ஷன் (2014)' என்ற எனது நூலில் நான் எழுதியிருந்தேன். மக்களாட்சிகோட்பாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் புதிதல்ல; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அது இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் இருந்தது. சிறிய சமுதாயங்கள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் விவாதங்கள் மூலம், முடிவு எடுப்பதில் பங்குகொள்வது இயல்பான வழக்கமாக இருந்தது.

கிராம சபைகளின் பங்கு குறித்தும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் எவ்வாறு நாட்டை மேலும் திறம்பட ஆட்சி செய்வது என்பதையும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் விவரித்துள்ளார். அந்தக் காலத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சொத்து மற்றும் கல்வி முக்கியத் தகுதிகளாக கருதப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ, கறைபடிந்தவர்களாகவோ, ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாகவோ கருதப்பட்டால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

Dinamani Puducherry

यह कहानी Dinamani Puducherry के August 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Puducherry से और कहानियाँ

Dinamani Puducherry

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Puducherry

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Puducherry

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size