कोशिश गोल्ड - मुक्त
வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ?
Dinamani Puducherry
|June 29, 2025
திருக்குறள் எளிய சொற்களால் ஆகிய அரிய நூல். ஆயினும் சில குறட்பாக்கள் உணர்வதற்கு அரியன. உரையாசிரியர்கள் ஒரு குறளுக்கே பலவாறாகப் பொருள் கண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் அக்குறளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட இடர்ப்பாடே ஆகும்.
திருக்குறள் எளிய சொற்களால் ஆகிய அரிய நூல். ஆயினும் சில குறட்பாக்கள் உணர்வதற்கு அரியன. உரையாசிரியர்கள் ஒரு குறளுக்கே பலவாறாகப் பொருள் கண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் அக்குறளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட இடர்ப்பாடே ஆகும். அத்தகைய குறட்பாக்களில் ஒன்று:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (85) என்பது.
இதற்கு, முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு, வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா" என்பது பரிமேலழகர் கண்ட பொருள். இதனையே மணக்குடவர் முதலிய பண்டைய உரைகாரர்களும் இக்கால உரையாசிரியர்களில் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இக்கால உரையாசிரியர் சிலர் இவ்வுரையை ஏற்கவில்லை. அதற்கு வித்தின்றி எவ்வாறு நிலம் தானே விளையும் என்னும் சிந்தனையே காரணம்.
நாமக்கல் கவிஞர் "வயலுக்கு விதை கூடப் போட வேண்டாம்" என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், விருந்திட்டு மிச்சமிருந்தால் உண்போம் என்ற மனப்பான்மையுள்ளவனுக்கு அவனுடைய சொந்த நிலத்தில் விளைந்துதான் தானியம் வர வேண்டும் என்பதில்லை" என்கிறார். இதற்குக் கருத்து விருந்தோம்புவதில் நெல் தீர்ந்துவிட்டால் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.
यह कहानी Dinamani Puducherry के June 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Puducherry
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Puducherry
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3 mins
May 15, 2026
Dinamani Puducherry
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Translate
Change font size
