कोशिश गोल्ड - मुक्त
யானை வழித்தடம் காண்போம்
Dinamani Perambalur & Ariyalur
|June 23, 2025
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
-
அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் ஒரு உயிரினம் தனிமைப்படுத்தப்பட்ட சிறு குழுக்களாகப் பிரியும்போது அந்த இனம் அருகி அழிவை நோக்கிச் செல்லும். சிறப்புவாய்ந்த ஆசிய யானைகள் அழிவை நோக்கிச் செல்லும் உயிரினங்களில் முக்கியமானவை. ஆசிய யானைகளைப் பாதுகாக்க காடுகளில் அவற்றின் வழித்தடங்களின் இணைப்பை உறுதி செய்தல் அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களை முழுமையாகச் செயல்படும் வழித்தடங்கள், பகுதியாக சேதம் அடைந்த வழித்தடங்கள், முற்றிலும் செயலிழந்த வழித்தடங்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டில் மொத்தமுள்ள 101 யானை வழித்தடங்களில் 51 வழித்தடங்கள் முழுமையாகச் செயல்படும் நிலையிலும், 24 வழித்தடங்கள் பகுதியாக சேதம் அடைந்த நிலையிலும், 26 வழித்தடங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விலங்குகளின் உணர்வு மற்றும் உடலியல் தேவைகள் முற்றிலும் வேறுபட்டவை என்றும், மனிதர்களுக்குத் தெரியாத பல சூழ்நிலைகள் விலங்குகளின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்றும் மனிதர்களால் அடையாளம் காணப்படும் யானை வழித்தடம் விலங்குகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்றும் 1990-ஆம் ஆண்டுகளில் யானை வழித்தட தேடலுக்கு எதிராக வாதிடப்பட்டது.
மற்றவர்களைவிட வழித்தடம் குறித்து நிபுணர்கள் நன்றாக அறிந்திருந்தாலும் பெரிய நிலப்பரப்பின் சுருக்கமான கண்ணோட்டம் வழித்தடங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, மனிதர்கள் அதிக கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கும் இரைச்சல் ஆறுகள் போன்ற விலங்குகளின் பயணத்தில் தடை ஏற்படுத்தி, வழித்தடத்தை இணைக்கும் முயற்சியை பயனற்றதாக்கலாம். எனவே, ஒரு நிபுணரால் முன்மொழியப்பட்ட வழித்தடம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கும், இந்த வழித்தடத்தை விலங்குகள் பயன்படுத்தும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
यह कहानी Dinamani Perambalur & Ariyalur के June 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ
Dinamani Perambalur & Ariyalur
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Translate
Change font size

