कोशिश गोल्ड - मुक्त
மத்திய அரசின் சுற்றறிக்கை: இந்திய கப்பல் மாலுமிகள் தவிப்பு
Dinamani Madurai
|August 11, 2025
நாட்டின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வசித்து வருகின்றனர். குறிப்பாக கப்பலில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் முக்கியமானவர்கள்.
தூத்துக்குடி, ஆக. 10:
இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றும் கடல் சார் போக்குவரத்தில் பணியாற்றும் இவர்களுக்கு, அண்மையில் 'டிஜி ஷிப்பிங்' என்று அழைக்கப்படும் மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கை (31/2025) இவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் புது சுற்றறிக்கையில், கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் சிறப்புப் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தரும் அனைத்துச் சான்றிதழ்கள் ஏற்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 18-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின் படி, ஹோண்டுயூரஸ், பனாமா, டோகோ, கேபான், பெலிஸ், குக் தீவுகள் போன்ற வெளிநாடுகள் அளிக்கும் கடல்சார் தகுதிச் சான்றிதழ்கள் இனிமேல் இந்தியாவில் செல்லாது. இதனால், இந்த சான்றிதழ்கள் மூலம் வேலை செய்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் ஒரே இரவில் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகள் அளிக்கும் கப்பல் பணி சார்ந்த பயிற்சிகளைப் பெற்று மாலுமிகளாகப் பணியாற்றி வருகின்றனர்; பலர் தங்கள் தொழிலில் நிபுணர்களாகவும் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சமீபத்திய சுற்றறிக்கையால் மாலுமிகள் பலர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Madurai के August 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Madurai
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Madurai
சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு
1 min
July 01, 2026
Dinamani Madurai
தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்
தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்
1 mins
July 01, 2026
Dinamani Madurai
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Translate
Change font size
