कोशिश गोल्ड - मुक्त
உயிர்களிடத்தில் அன்பு வேணும்...
Dinamani Dindigul & Theni
|June 19, 2025
எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.
உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.
மனிதர்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளர்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிர்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து விட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணர்வினாலும் தெளிய மறுக்கிறோம்.
இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதர்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிர்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.
இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.
இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணர்த்திக்காட்டியிருக்கிறார்.
இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். 'அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே' என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.
यह कहानी Dinamani Dindigul & Theni के June 19, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ஆம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

