Facebook Pixel மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை! | Dinamani Dharmapuri - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

Dinamani Dharmapuri

|

May 11, 2025

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

- -ந.முத்துமணி

வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

வியாசர்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.

அவரிடம் ஒரு சந்திப்பு:

தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11-ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.

Dinamani Dharmapuri

यह कहानी Dinamani Dharmapuri के May 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

IPL தொடர் தோல்வியிலிருந்து மீண்ட லக்னௌ

மிட்செல் மார்ஷ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Dharmapuri

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி

'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'நல்ல செய்தி' காத்திருக்கிறது: அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் வியாழக்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Dharmapuri

தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்

திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

time to read

1 min

May 08, 2026

Translate

Share

-
+

Change font size