कोशिश गोल्ड - मुक्त
வார்த்தை வன்முறை!
Dinamani Dharmapuri
|March 20, 2025
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
-
தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான். ஆனால், தேவையே இல்லாமல் இருவரும் அடுத்தவரின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மிகவும் அசிங்கமாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைக் கடந்து சென்றவர்கள் முகம் சுளித்துக் கொண்டே சென்றார்கள்.
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. படித்த மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு. எதற்காகவோ இரண்டு பெண்களுக்குள் பிரச்னை. அங்கும் வார்த்தைகள் வரம்பு மீற ஆரம்பித்து, தடித்த சொற்கள் விழ ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டு ஆண்களும் சேர்ந்துகொள்ள காதுகூசும் அளவுக்கு வசவுகள். இங்கே கொஞ்சம் ஆங்கிலம், மீதி தமிழ். மற்றபடி அந்த படிக்காத பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
கோபம் வந்தால் எல்லா மனிதர்களும் தன்னிலை மறந்து போகிறார்கள். இதுவே வாய்மொழி வன்முறை என்பதாகும். வன்முறை என்றால் என்ன? மனிதர்களால் உடல் ரீதியான பலத்தையோ அல்லது சக்தியையோ பயன்படுத்தி பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், அவமானம், வலி, காயம், இயலாமை, சொத்துகளுக்கு சேதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்துவது, ஒரு சமுதாயத்தின் வாழும் சூழலுக்கு அழிவை ஏற்படுத்துவது ஆகிய இவையே வன்முறை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரை அடித்து துவைப்பது மட்டுமே வன்முறை அல்ல. கத்தியால் குத்திக் கொல்வதோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதோ, வெடிகுண்டு வீசிக் கூண்டோடு அழிப்பதோ மட்டும் வன்முறை என்று கட்டம் போட்டுவிடக் கூடாது.
வாய்மொழி வன்முறையும் பலருக்கு மிகப்பெரிய மனக் காயத்தை ஏற்படுத்தும். மற்றவர் முன்னிலையில் கேலி செய்வது; மட்டம் தட்டிப்பேசுவது; அவர் பேச விரும்பாத விஷயத்தைப் பேசுவது; குத்திக்காட்டிப் பேசுவது; அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவது; அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்துவது ஆகிய அனைத்தும் வன்முறையே.
ஒருவருடைய இனம், நிறம், வயது, தோற்றம், இயலாமை, மொழி, மதம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் இழிவாகப் பேசினால் அது குற்றம்.
यह कहानी Dinamani Dharmapuri के March 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Dharmapuri
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Dharmapuri
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Dharmapuri
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Translate
Change font size

