Facebook Pixel இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்... | Dinamani Coimbatore - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்...

Dinamani Coimbatore

|

August 06, 2025

விறுவிறுப்பாக நடைபெற்ற 'ஆண்டர்சன் - டெண்டுல் கர் கோப்பை' டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமன் ஆனதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.

- -நாதன் நடராஜன்

இந்தத் தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து தொடங்க, அடுத்த ஆட்டத்திலேயே இந்தியா அபார வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 3-ஆவது ஆட்டத்தில் வெல்ல, போராடிய இந்தியா 4-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையுடன் வசதியாக கடைசி ஆட்டத்துக்கு வந்தது.

தொடர் கைநழுவிச் சென்று விட்டபோதும், வெற்றிக் கோப்பையை இங்கிலாந்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத இந்தியா, விடாப்பிடியாக விளையாடி கடைசி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. தொடரையும் சமன் செய்திருக்கிறது.

தி ஓவல் டெஸ்ட் முடிவை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்தியா தொடரையே வென்றுவிட்டதைப் போன்ற சூழல் தென்படலாம். ஆனால் இந்தச் சமன், சாதாரணமானது அல்ல.

வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, நம்பகமான பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில், பிரதான பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா பகுதியளவே பங்களித்த சூழலில் இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இந்தத் தொடரை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் தரையிறங்கிய போது, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்த 5 டெஸ்ட்டுகளின் முடிவில், அடுத்த தலைமுறை இந்திய அணி, தனது புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் 'பாஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்ட உத்தியுடன் களம் கண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரை சமன் செய்வது என்பது, அவ்வளவாக அனுபவம் இல்லாத வீரர்களுடன், புதிய தலைமையின் கீழ் விளையாடிய இந்தியாவுக்கு எளிதானதல்ல.

Dinamani Coimbatore

यह कहानी Dinamani Coimbatore के August 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Coimbatore से और कहानियाँ

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Coimbatore

தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Coimbatore

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size