कोशिश गोल्ड - मुक्त

சென்னையில் மேகவெடிப்பால் கனமழை மணலியில் 27 செ.மீ கொட்டியது

Dinakaran Chennai

|

September 01, 2025

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த அதிகனமழை காரணமாக மணலியில் ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவைத் தாண்டி மழை பெய்துள்ளதால், மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

மொத்தத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் இரவு 12 மணிவரை மணலியில் 27 செ.மீ மணலி புதுநகர் பகுதியில் 26 செ.மீ விம்கோ நகரில் 23 செமீ என அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ெதாடர்ச்சியாக உருவாகி வரும் காற்றழுத்தங்கள் வடமேற்கு திசையில் பயணித்து அரபிக் கடல் பகுதிக்கு செல்வதால், தென்மேற்கு பருவக் காற்றை வடக்கு பகுதிக்கு வந்து வட மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்து வருகிறது. அதன் காரணமாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதவிர இமாச்சல பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களில் இரு காற்று இணைவு ஏற்பட்டு மேக வெடிப்புகளும் ஏற்பட்டு அந்த மாநிலங்கள் மழை வெள்ளத்திலும், மலைசரிவுகளையும் சந்தித்து வருகின்றன.

பொதுவாக மேகவெடிப்புகள் மலைப்பிரதேசங்களில் தான் அதிகமாக நிகழும் இயற்கை நிகழ்வு என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் நிலப்பரப்பில் இது போன்ற மேகவெடிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் ராமநாதபுரத்தில் ஒரே இரவில் 370 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. கேரளாவிலும் வயநாடு பகுதியில் இதுபோல மேகவெடிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் இது போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக மணலியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பக் காற்று மற்றும் குளிர்க்காற்றும் இணையும் நேரங்களில் அதிக ஈரப்பதம் மேகங்களில் சேரும் போது அது தாங்காமல் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அது மேகவெடிப்பு என்று கணக்கிடப்படுகிறது. அதேநிலை நேற்று முன்தினம் மணலியில் நிகழ்ந்துள்ளது. மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 6 இடங்களில் அதற்கு நிகரான அளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dinakaran Chennai

यह कहानी Dinakaran Chennai के September 01, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Chennai से और कहानियाँ

Dinakaran Chennai

திருப்பணி நகராட்சி சார்பில் கசப்பு பசுமை இயக்கம்

திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகர்ப்புற பசுமை இயக்கம் தொடக்க விழா தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

time to read

1 mins

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

வாகன ஓட்டிகள் அவதி

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண் கைது

பெண் பயணிகளை குறி வைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை

தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு பூமார்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணியில் ம.பொ.சி சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size